பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) காலத்திற் கேற்றபடி பெருச்சாளி காவடியெடுத் தாடினதாம்.

காலமல்லாக் காலத்திற் காய்த்ததாம் பேய்ச்சுரைக்காய்.

காலமறிந்து ஞாலம் ஒழுகு.

காலமறிந்து பிழையாதவன் வால மறுந்த குரங்காவான்.

காலம்போம் சொல் நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும். காலம்போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது.

மரபுக்கூற்று

காலமெல்லாம் பாடுபட்டும் கையில் கால்துட்டைக் காணோம்.

செய்யுள் வழக்கு (இலக்கணம்)

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், முக்காலம், காலப் பெயர், காலமயக்கம், காலமலைவு, காலவழு, காலவழுமைதி, கால வாகுபெயர், கால விடைநிலை.

தொல்காப்பிய நூற்பாக்கள்

“வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.”

"காலந் தாமே மூன்றென மொழிப.”

(76060. 1)

(692)

66

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா

அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்

மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. ’”

(ஷை 3)

'குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லாம்

66

66

உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. ’”

(60g 4)

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியொடு முடியும் என்ப.”

(Mg 10)

அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும்

அப்பால் காலங் குறிப்பொடு தோன்றும்.”

(Mg 16)