பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

“அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்

என்ன கிளவியுங் குறிப்பே காலம்."

(Mg 17)

66

...காலக் கிளவி யுயர் திணை மருங்கில்...

(Mg 18)

“...காலக் கிளவி யஃறிணை மருங்கில்...

(Mg 24)

“அன்ன மரபின் காலங் கண்ணிய...

(Mg 32)

"நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்

செய்யும் செய்த என்னுஞ் சொல்லே."

(Mg 37)

“செய்தென் எச்சத் திறந்த காலம்

எய்திடன் உடைத்தே வாராக் காலம். '

(Mg 42)

“முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை

எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து

மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்.”

(Mg 43)

“... செய்வ தில்வழி நிகழுங் காலத்து...'

(Mg 45)

“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி...

(60g 48)

“இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்..”

(60g 50)

(ng 51)

67

“ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.”

தொல்காப்பியம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தாயினும் “மொழிப”, “என்ப”, “என்மனார் புலவர்” “வரையார்” என்னும் ஆசிரியர் கூற்றுகளாலும்,

“செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்”

என்னும் பனம்பாரனார் கூற்றாலும், அதில் (தொல்காப்பியத்தில்) கூறப்பட்டுள்ள பண்டை யிலக்கணமெல்லாம் தலைக்கழகக் காலத்தின வென்றும், இந்திய ஆரியரின் முதல் நூலாகிய இருக்கு வேதத்திற்கு முற்பட்டதும், வேத ஆரியரின் முன்னோர் இந்தியா விற்கு வருவதற்கும் முந்தியதுமான, முதுபழந்தொன்மை யன வென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.

இதுகாறுங் கூறிய இருவகை வழக்குச் சொற்களே போது மாதலின், இலக்கணமல்லாத செய்யுட் சொற்கள் இங்குக் காட்டப்படவில்லை.