பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) தென்னெல்லையாகவும் குமரியாற்றை வடவெல்லையாகவும் கொண்ட பழம் பாண்டிநாடு, குமரிக்கண்டம்.

குமரிருட்டு (குமரியிருட்டு), குமரிவாழை என்பன இளமையையும்; குமரிவேட்டம், குமரிப்போர் என்பன முதல் நிகழ்ச்சியையும்; குமரிப்படை, குமரிமதில் என்பன அழியா

நிலைமையையும் உணர்த்தும்.

குமர், குமரன், குமரி என்னுஞ் சொற்கட்குத் திரண்ட இளமை என்பதே அடிப்படைப்பொருள். ஒ.நோ : முருகு = இளமை, முருகு - முருகன் = இளைஞன், குமரன், வள்ளிமணாளன், குறிஞ்சி நிலத் தெய்வம்.

வடமொழியாளர், குமரகுமரியரை ஆரியத் தெய்வமாகவும், அவர் பெயரை ஆரியச் சொல்லாகவுங் காட்டல் வேண்டி, குமரன் என்பதைக் குமார என்றும் குமரி என்பதைக் குமாரீ என்றும், ஈற்றயலுயிர் நீட்டி, மகன் மகள் என்று முறையே பொருள் குறித்து, குமார என்பதைக் கு + மார என்று சிதைத்து, ‘எளிதில் இறப்பது' (easily dying) என்று பொருட் கரணியங் கூறுவர்.

குமரன் குமரி என்னுஞ் சொற்கட்குத் தமிழில் இளைஞன் இளைஞை என்றே யன்றி, மகன் மகள் என்னும் பொருளில்லை. இவ் விரு சொற்கட்கும் கும் என்பதே மூலம் என்றும், ஆரியத் தொன்மக் கதைப்படி முருகன் சிவனுக்கு மகன் எனினும், காளி அவனுக்கு மகளாகாள் என்றும், எளிதிலிறப்பது குழப்பருவத்திலும் கிழப்பருவத்திலுமன்றி

மழப்பருவத்தி லில்லையென்றும், அறிதல் வேண்டும்.

'இந்தச் சுமையைத் தூக்கமுடியாத நீ, ஒரு குமரன் என்று இருக்கலாமா' என்று பெண்டிர் வினவுவதையும், “கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப்பெண்ணிற்கு ஒரு பிள்ளை என்னும்

பழமொழியையும், நோக்குக.

கும் - கும்மை - கொம்மை = இளமை (திவா.).

மணமாகாத இளைஞனையும் இளைஞையையும் செல்வன் செல்வி என்று அடைகொடுத்துப் பெயர் குறிப்பது, குமரன் குமரி என்பன வடசொல்லென்னும் அறியாமையை அடிப்படையாகக் கொண்டது. செல்வன் செல்வி என்று மணமக்களைக் குறிப்பதே மரபாதலால், Master, Miss என்னும் அடைகளை இனிக் குமரன், குமரி என்றே தமிழிற் குறிக்க.