பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

9. அந்தி

உம்முதல் = கூடுதல்.

=

முன்வருதல் (தோன்றுதல்), முன் செல்லுதல் (செல்லுதல்), நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், வளைதல், துளைத்தல், துருவுதல் ஆகிய எண்பெருங் கருத்துகளிலும், உகரவடி மூலவேர்ச் சொல் மூலவேர்ச் சொன்முதன் மெய்களாகியகசதநபம என்னும் ஆறொடுங் கூடி, அறு வழிவேர்ச் சொற்களைப் பிறப்பிக்கின்ற தென்னும் உண்மை, முன்னரே பலவிடத்துங் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதற் பொருள் கொண்ட உம் என்னும் மூலவேர்ச்சொல்லினின்று, கும் சும் தும் நும் பும் மும் என்னும் அறு வழிவேர்ச்சொற்கள் பிறக்கும்.

1. கும். கும்முதல் கூடுதல், திரள்தல். முந்தின கட்டுரை பார்க்க. 2. சும். சும்மை = தொகுதி. “சுடரின் சும்மை விசும்புற” (கம்பரா. இலங்கை காண். 33). சும் - சொம் - சொத்து.

3. தும். தும் -திம் - திம்மை = பருமை, பருமன். திம்மலி (FIL) = பருத்தவள். திம்மன் = பருத்த ஆண்குரங்கு. திமி = பெருமீன் (திவா.). திமிறுதல் = நீண்டு பருத்து வளர்தல். திமிலம். = பெருமீன் (பிங்.).

4. நும் - (இறந்துபட்டது).

5. பும். பும் - பொம் - பொம்மல் = 1. கூட்டம். “பொலிந்தன வுடுவின் பொம்மல்” (கந்தபு. காசிபன் புல. 28). 2. பருமன். “பொம்மல் வனமுலை” (சீவக.2717). 3. மிகுதி. “ புகுந்தவவ் விருளின் பொம்மல்" (இரகு . இலவாண. 55). 4. பொலிவு. “பொன்னனைய பொம்மனிறம்”. (கம்பரா. உருக்கா. 68). பொம்முதல் = மிகுதல் “அதிர்குரல் பொம்ம” (பாரத. பதினான். 112).

பொம்மெனல் = அடர்ச்சிக் குறிப்பு. “ பொம்மெ னிருள் வாய்” (திருக்கோ. 395).