பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) சமர் - சமர்த்து = போர்த் திறமை. திறமை, “சமர்த்தாற்று மாற்றால்” (அரிச். பு. இந்திர. 46)

சமர்த்து - வ. ஸமர்த்த.

சமர்த்து - வ. ஸாமர்த்ய.

அம் -அமை. அமைதல் = 1. நெருங்குதல். “வழையமை சாரல்” (மலைபடு. 181). 2. பொருந்துதல். “பாங்கமை பதலை” (கந்தபு. திருப்பர. 9.). 3. தங்குதல். “ மறந்தவ ணமையா ராயினும்” (அகம். 37). 4. தகுதியாதல். 5. உடன்படுதல். கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை” (குறள். 803).6. ஏற்புடையதாதல். "பொருள் வேறுபட்டு வழீஇயமையுமாறு” (தொல்.பொருள். 196, உரை). 7. தீர்மானமாதல். அந்த வீடு எனக்கமைந்தது. 8. அடங்குதல். “அமையா வென்றி” (கல்லா. முருக. 15). 9. நிறைதல். “உறுப்பமைந்து” (குறள். 761) 10. போதியதாதல். “கற்பனவு மினியமையும்” (திருவாச. 39 : 3). 11. பொந்திகை (திருப்தி) யாதல். “அமைய உண்மின்” (W.). 12. கூடியதாதல். “காரியம்... அமையு மாயினும்” (சேதுபு. அவை. 2). 13. முடிவடைதல். அமைந்ததினி நின்றொழில்’” (கலித். 82).

அமை - அமைதி = 1. பொருந்துகை. 2. சமையம். “அன்னதோ ரமைதி தன்னில்” (கந்தபு. மூன்றா. 210). 3. தன்மை. 'ஆற்றின தமைதி” (சீவக .1176). 4. செய்கை. “அமைதி கூறுவாம்” (கந்தபு. தெய்வ. 185). 5. அடக்கம். . 6. தாழ்மை. . “ தொழுதகை யமைதியின்” (பரிபா. 4: 71). 7. அமரிக்கை. 8. சமந்தம் (சாந்தம்). 9. நிறைவு. “நகரமைதி செப்புவாம்’ (சீவக. 78). 10. பொந்திகை.

அமை அமைவு. அமை அமைப்பு - அமைப்பகம்.

-

-

=

-

அமை அமையம் பொருந்திய வேளை. " ஆனதோ ரமையந் தன்னில்” (கந்தபு. திருக்கல். 72). ஒ.நோ: நேர் - நேரம்.

அமையம் - சமையம் = தகுந்த வேளை, வேளை.

அமை - சமை. சமைதல் = 1. அமைதல். 2. நிரம்புதல். “மலர்ந்து சமைந்த தில்லைகாண்” (திருவிருத். 68, வியா. 357). 3. முடிதல். 4. அரிசி காய்கறி முதலிய உணவுப்பொருள்கள் வெந்து உண்ணத் தகுதியாதல். 5. வேதல். 6. புழுங்குதல். இந்தக் கூட்டத்திற் சமைந்து விடுகிறது. 7. அழிதல். “ஐவர் தலைவருஞ் சமைந்தார்” (கம்பரா. பஞ்சசே. 67). 8. பெண்பிள்ளை பூப்படைந்து நுகர்ச்சிக்குத் தகுதியாதல். சமைந்தால் தெரியும் சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் (பழ.). 9. மக்கள் இறைவனை வழிபட்டும் அறநெறியில் ஒழுகியும் அவன் திருவருளைப் பெற அல்லது திருவடிகளை யடையத்

6