பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

83

தகுதியாதல். 10. ஏதேனும் ஒரு நிலைமைக்கு அல்லது கருமத்திற்கு அணியமாதல்.

ம. சமை.

சமைத்தல் = 1. உணவுப்பொருளை வேவித்தல். 2. ஒன்றைச் செய்து முடித்தல். 3. அழித்தல் . மாதரைத் தங்கழலாற் சிலர் சமைத்தார்” (கம்பரா. கிங்கர. 42).

ம. சமெ, க. சமை, தெ. சமயு.

-

சமை சமையல் = உணவவித்தல்.

சமை

-

சமையம்

-

சமயம்

=

ஆதன் (ஆன்மா) இறைவன்

திருவடிகளை யடையச் சமையும் வகைபற்றிய மதம்.

சமயம்

1

வ. ஸமய.

சமையம் என்பது வேளையையும், சமயம் என்பது மதத்தை யும் குறிக்கும் என வேறுபாடறிக.

அமை = 1. அமைவு. 2. கூட்டம். 3. கெட்டி மூங்கில். “அமையொடு வேய்கலாம் வெற்ப” (பழ. 357).

66

அமை - அவை = 1. மாந்தர் கூட்டம் (பிங்.). 2. அறிஞர் கூட்டம். அவையறிதல் (குறள்). 3. அவை மண்டபம். தமனியத் தவைக்கண்” (கந்தபு. நகரழி. 6). 4. நாடகவரங்கு, கூத்தாட்டவை (குறள். 332).

ஒ.நோ : அம்மை - அவ்வை. செம்மை - செவ்வை.

அவை

சவை

=

அறிஞர் கூட்டம்.

சவைநடுவே நீட்டோலை

வாசியா நின்றான்” (மூதுரை, 13).

சபை

-

சபை - வ. ஸபா (sabha).சமர், சமை, சமையம் என்னுஞ் சொற்கள் போன்றே, சவை யென்னுஞ் சொல்லும் சகர மெய்யொடு கூடிய அகரமுதற் சொல்லாகும்.

வடமொழியாளர் ஸபா என்னுஞ் சொல்லை ஸ + பா (bhā) என்று பிரித்து, ஒளியொடு (பிரகாசத்தொடு) கூடியது என்று பொருட் கரணியங் காட்டுவர்

காலஞ்சென்ற சு.கு. சட்டர்சி அதை மறுத்து, sib என்னும் தியூத்தானிய அல்லது செருமானியச்சொல்லினின்று ஸபா என்னும் சொல் திரிந்ததாகக் கூறினார். ஆயின், sib என்பது உடன்பிறந்தாருள் ஒருவரைக் குறிக்குஞ் சொல்லாதலால், அது பொருந்தாது. ஆகவே, அவை என்பதை மூலச் சொல்லாகக் கொள்வதே பொருத்தமாம்.

அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம் (முதனிலைத்

=

தொழிலாகு பெயர்). அமை

-

ம =

அவை சவை சபை.

-