பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

(3)

(4)

(5)

வட

தமிழ் வளம் ஆரியன் நிலத்தேவன்; சமற்கிருதம் தேவமொழி என்னும் ஏமாற்றினாலேயே வடசொல் தமிழிற் புகுத்தப்பட்டது. தமி ழுக்கு வடசொல் தேவையில்லை, 229ஆம் புறநானூற்றுப் பாட்டில், வடக்கு கிழக்கு என்னும் தென்சொற்கட்குத் தலைமாறாக ஊசி (உbY) பாசி (ப்ராசீ) என்னும் சொற்கள் வேண்டாது வந்து தமிழின் தூய்மை குலைத் தலைக் காண்க. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' ஔவையார் பாட்டில் 'அன்னையும் தந்தையும்' என்றிருப்தே தக்கதாம். கஉடன் பிறந்தே கொல்லும் வியாதிக என்பது உடன் பிறந்தே கொல்லும் பிணிகள்' என்றே இருத்தல் வேண்டும்.

ரியக்குடும்ப மொழிகளிலுள்ள கூட்டுச் சொற்களெல்லாம், ஆ), இ (ஈ), உ (ஊ) என்னும் தமிழ்ச் சுட்டெழுத்துக்களி னின்று தோன்றிய தோன்றியவையே. தமிழை வடமொழித் துணை து யின்றிப் பேசவும் எழுதவும் இயலும். ஆயின், தமிழ்த் துணையின்றி வடமொழியைப் பேசவோ எழுதவோ இயலாது.

வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழ், ஐந்திலொரு பகுதி மேலையாரியம், ஐந்திலொரு பகுதி வடதிரவிடமான பிராகிருதம், ஐந்திலொரு பகுதி புதிதாகப் புனையப்பட்டது. (6) மொழியாராய்ச்சியும், தமிழ் வரலாற்றறிவும் இல்லாத சிலர், தம் பட்டம் பதவியைத் துணைக்கொண்டு, இளைஞரையும், பொது மக்களையும் மயக்கலாம். ஆயின் ஏமாற்று நிலைக்காது. (7) தமிழ் 'செஞ்ஞாயிறு' போன்று இயல்பாகவே 'செந்தமிழ்' ஆகத் திகழ்கின்றது.

(8) The Lemurian Language and its Ramifications நூல் அடுத்து வரும். அதைக் கண்டு தெளிக.

என்னும்