பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் இறுதிப் பேருரை

101

என்று முருகன் வணக்கத்தையும் வைத்துக் கொண்டார்கள். அதற்கப்புற சிவமத திருமால்மதம் இரண்டும் தமிழர் மதங்களென்று தெரிந்து கொண்டார்கள். ஆகையினாலே தங்களுடைய வேத வணக்கத்தையும் அவர்களிடத்திலே செலுத்தமுடியவில்லை. இந்த இரண்டையும் அவர்கள் தழுவிக் கொண்டார்கள் – இருமதங்களையும்.

ஆனால் தமிழர்கள் இவர்கள் வயப் படுத்துவதற்கு என்ன செய்தார்கள் என்றார், முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கை என்ற ஒரு புதுக்கொள்கையைத் தோற்றுவித்தார்கள். திரிமூர்த்தி - முத்திருமேனிக் கொள்கை ஒரு பெரிய சூழ்ச்சியான புணர்ப்பு அது. என்ன செய்தார்கள் என்று சொன்னால் திருமால்மதம், சிவமதம் இரண்டும் தனிமதங்கள் என்பதை அறிய வேண்டும். (மீண்டும் கையொலி) எப்படி? கிறித்தவமும் இசலாமும் எப்படி இரண்டு மதங்களும் வெவ்வேறோ அல்லது இசலாமும் யூதர்நெறியும் எப்படி இரண்டும் வெவ்வேறு மதமோ அதுபோல இந்த மாலியம் (வைணவம்) சிவனியம் (சைவம்), இரண்டும் வெவ்வேறு மதங்கள்.

66

இப்போது திருநீறு பூசுகிறவனைப் போயி “நீ திருமண் சாத்து சாத்து என்றால் சாத்து வானா? திருமண் சாத்துகிறவனைப் போய் நீறு பூசு என்றால் பூசுவானா? அந்தத் திருவானைக் கர்வார்க்கும் திருவரங்கத்தார்க்கும் உள்ள சண்டைகளையெல்லாம் இந்த எண்பனுவல் எழுதினார்களே அட்ட பிரபந்தம்' எழுதின பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்) என்னும் அழகிய மணவாளதாசர் அவர்களைப் பற்றிச் பொல்ல கருதினேன். (குறிப்பி 19) 'இனி, உங்களுக்கு ஏதேனும் ஐயுறவு இருந்தால் நீங்கள் ஒரு பட்டி மன்றமாக நடத்துங்கள்” என்றேன், மூவாண்டிற்கு முன்னலே நான்... இந்த சமசுகிருதத்திலே வேர்ச்சொல் வேற்றுமொழி என்று காட்டியிருக்கிறார்கள். இவர் .... (மீண்டும் கையொலி) வாணியை (சரசுவதியை) வேற்று மொழி வேர்ச்சொல் என்று காட்டியிருக்கிறார்கள். அவையெல்லாம். தமிழில்தான் இருக்கின்றன. இவற்றை நாம் நீக்குவதற்கு மீட்பதற்கு, தமிழ்தான் மூலம் என்று காட்டுவதற்கு நீங்கள் ஒரு பட்டிமன்றம் ஏற்படுத்துங்கள். அதி செருமானியர், பிரஞ்சியார், ஆப்பிரிக்கர், அமெரிக்கர், ஆங்கிலேயர் யாராக இருந்தாலும் சரி -எதிர்த்தாலும் சரி - நாங்கள் நாட்டுகிறோம்.... (நெடுநேரம் அவையினர் கைதட்டினர். ஐயா பாவாணர் அவர்கள் தம் உரையினை நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் ஆற்றிய கடைசி உரை இதுதான்.)

  • * *