பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறுப்புரை மாண்பு


90

மறுப்புரை மாண்பு

போர்த்துக்கீசியச் சொல்லிற்கும் வடசொல்லிற்கும் வேறுபா டென்னை யெனின், முன்னது தன்னவரே புகுத்திக்கொண்டதென்றும் பின்னது வேற்றாரும் மாற்றாருமான ஆரியர் புகுத்தியதென்றும், அறிந்து கொள்க.

தொல்காப்பியர் தாமே ஆண்டனவாகப் பிரயோக விவேகம் குறிக்கும் வடசொற்கள் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.

தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியும் தமிழன் பிறந்தகமும் ஆரியன் தோன்றியகமும் பற்றிய ஆராய்ச்சியும் தமக்கின்மையால், பர்.தெ.பொ.மீ. தமிழரும் ஆரியரும் தொடர்பற்ற வெவ்வேறினத்தா ரென்றும், ஒரே காலத்தில் தோன்றியவரென்றும், இன்று போன்றே முன்பும் இருந்தன ரென்றும், ஆரியராலேயே தமிழர் நாகரிகப்படுத்தப்பட்டன ரென்றும், எண்ணிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. தமிழர் என்றது திரவிடரையும்

தழுவும்.

6

அவர் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த காலத்தில், குமரிமுனைக்குத் தெற்கே ஒருகாலத்தில் நிலமட்டும் இருந்ததென்றும், அதில் மக்கள் குடியிருக்கவில்லையென்றும், ஒரு முறை சொன்னதாகப் பர்.மெ. சுந்தரனார் சொன்னார். தமிழரின் முன்னோர் குமரிநாட்டுப் பழங்குடி மக்கள் என்பது, தமிழ் அல்லது தமிழர் வரலாற்றிற்கு அடிப்படையான உயிர்நாடிச் செய்தியாகும். இதை யுணராதார் எத்துணை கற்பினும் தமிழறிந்தவராகார்.

66

'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி”

(சிலப். 11 : 19-22)

என்னும் பகுதியும் அதற்கு அடியார்க்குநல்லார் வரைந்த உரையுமே, தமிழன் குமரிநாட்டுத் தோற்றத்திற்குப் போதிய சான்றாம். இஃதல்லாது இருபதிற்கு மேற்பட்ட ஏனைச் சான்றுகளுமுள.

குமரிநாட்டுத் தமிழரே, தமிழின் பல்வேறு நிலையில் பல்வேறு திசை சென்று உலக முழுதும் பரவினர். (V.R.) இராமச்சந்திர தீட்சிதரின் ‘தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் ஆங்கில நூலைப் பார்க்க, வடபாற் சென்ற தமிழர் திரவிடராயினர். வட திரவிடர் பிராகிருதராயினர். பிராகிருதர் ஐரோப்பாவும் மேல்ஆசியாவும் சென்று ஆரியராயினர்.

“First as to the Aryan family, called also Indo-European, which takes in the languages of part of South and West Asia, and almost the whole of Europe. The original tongue whence these are all descended may be called the Primitive Aryan. What the roots of this ancient

"