பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறுப்புரை மாண்பு


92

மறுப்புரை மாண்பு

தா என்னும் ஓர் அடிப்படைத் தமிழ் வினைச்சொல், இலத்தீனிலும் கிரேக்கத்திலும் வேதமொழியிலும் பல்வேறு வடிவில் திரிந்து வழங்கு கின்றது. தமிழின் முதன்மையையும் மூலத் தன்மையையும் காட்ட இஃதொன்றே போதும். அதனால், இதை மறுக்குமாறு, ஈராண்டிற்கு முன்பே பர்.தெ. பொ. மீ. அவர்கட்கு ஓர் அறைகூவல் விடுத்தேன். அதற்கு இதுவரை மறுமொழி யில்லை.

கீழையாரியர் கால்நடை மேய்த்தலைச் சிறப்புத் தொழிலாகக் கொண் டிருந்தனரென்பது, கோத்திரம் என்னும் குடும்பப் பெயராலும் துஹித்ரு என்னும் மகட்பெயராலும், உழவுத்தொழிலை மேற்கொள்ளவில்லை யென்பது, அவர் நாடோடித் தன்மையாலும், மேலையாரிய மொழிகளி லுள்ள ஏர் என்னுந் தென்சொல் அவர் மொழியி லின்மையாலும், உழவுத் தொழிலைக் கொலைத்தொழிலென்று அவர் தரும சாத்திரம் பழிப்பதாலும்; அறியப்படும். (கோ = ஆன் (பசு), துஹ் = கற) அவர் மொழிக்கு மேனாட்டில் வழங்கிய பெயர் மறைந்தொழிந்தது. ஆரியம், சமற்கிருதம் என்னும் இரண்டும் அவர் இந்தியாவிற்கு வந்து தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே தோன்றியவை. ஆரியம் என்னும் சொல் இந்தியாவினின்றே மேலை நாடுகட்குப் பரவிற்று.

=

அருமை, அழகு,

ஆரியம் என்பது தமிழ்ச் சொல்லே. அரு ஆரி மேன்மை. “ஆரி யாகவஞ் சாந்தந் தனித்தபின்" (சீவக. 129) ஆரி - ஆரியன் = மேலோன். இது ஆரியரே தமிழரை ஏமாற்றித் தமக்கு இட்டுக்கொண்டது ‘aristos' (best) என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் ‘அரு' என்பதே மூலமாயிருத்தல் வேண்டும். ஏர்-Ar-Arya என்பது தவறு.

=

கும் - சும் - சம்(ஸம்). கும்முதல் = குவிதல், கூடுதல், கலத்தல், கருமை மிகுதி, பெருமை. கள்ளுதல் = கலத்தல், கூடுதல். கள் - களம் = கூட்டம், அவை. கள் - கர் - கரு. கருத்தல் = மிகுதல், மிகுத்தல், செய்தல். கரு - கருமம். கரு - கருவி. கரு - கரணம். கரு(வ.) க்ரு - க்ருத. ஸம்க்ருத – ஸம்ஸ்க்ருத = பிராகிருதமும் தமிழும், அல்லது வேதமொழியும் தமிழும் கலந்து செய்யப்பட்ட மொழி. ப்ராக்ருத சமற்கிருதத்திற்கு முந்து செய்யப்பட்ட மொழி. புதிதாகச் செய்யப்பட்ட பொருளால் அப் பொரு ளினம் மிகுதல் காண்க. இனி, கருத்தல் = கை கருத்துக் காழ்ப்பேறு மளவு உழைத்துச் செய்தல் என்றுமாம். “கருங்கைக் கொல்லர்” (சிலப். 5:29) என்னும் வழக்கை நோக்குக. கருத்தல் என்னும் வினை தமிழில் முன்பே வழக்கற்றது. பிரா = முன். க்ருத = செய்யப்பட்டது

=

தமிழர் கி.மு. 100,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டில் தோன்றிய மூல மக்களினத்தாரின் வழிவந்தவர். இற்றை இலக்கியத்தினும் விரிவான, எழுநிலச் செய்யுளாலியன்ற பல்துறை முழுத் தூய இலக்கியத்தையும் முத்தமிழிலக்கணத்தையும் கொண்டிருந்தவர்.