பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

93


தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

தொல்காப்பியம் நூலினியல்பை,

66

66

ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென் றாங்கனை மரபி னியலு மென்ப.' “நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரினது படல மாகும். "மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற்

66

றோன்றுமொழிப் புலவர் பிண்ட மென்ப”

99

93

(செய். 166)

99

(செய். 168)

(செய். 169)

(செய். 170)

என விளக்கி, ஈருறுப்படக்கிய நூல் என்றும், மூவுறுப்படக்கிய பிண்டம் என்றும், நூலை இருவகையாக வகுத்துக் கூறிற்று.

மேற்கூறிய பிண்ட நூற்பாவிற்கு.

66

‘அம் மூன்று உறுப்பினையும் அடக்கி வருவது பிண்டம் என்றவாறு.

66

'அம் மூன்றனையும் உறுப்பெனவே, பிண்டமென்பனதாம் உறுப்பினவென்பது பெற்றாம். தொல்காப்பியம் என்பது பிண்டம்; அதனுள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகார மென்பன படலமெனப் படும்; அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும் ஒழிந்த இரு கூறுமெனப்படும்.

"தோன்றுமொழிப் புலவர் பிண்ட மென்ப' என்றதனால், பிண்டத் தினையும் அடக்கிநிற்பது வேறு பிண்டமுளதென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழென்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின்’ என்று உரைத்தார் பேராசிரியர்.

ஒத்து எனினும் இயல் எனினும் ஒக்கும். அதிகாரம் எனினும் படலம் எனினும் பால் எனினும் ஒக்கும்.

பாணினீயம் சூத்திரம், பாதம், அத்தியாயம் என்னும் மூன்றுறுப் படக்கியதேனும் அதைப் பிண்டமென்னும் வழக்கு வடமொழியிலில்லை. மேலும், அது எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவதால், ஈருறுப் படக்கியதாகவே கொள்ளப்படும். ஆதலால், அது நூலன்றிப் பிண்டமாகாது.

தொல்காப்பியத்திலுள்ள பொருளதிகாரம் என்னும் மூன்றா முறுப்பு, யாப்பு, அணியென்னும் பொதுவகைக் கூறுகளொடு வேறெம் மொழியிலு மில்லாத பொருளிலக்கண மென்னும் தனிச்சிறப்புக் கூற்றைக் கொண் டிருத்தலால், தொல்காப்பியத்துக் கிணையான இலக்கணநூல் இவ் வுலகில்