பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறுப்புரை மாண்பு


102

மறுப்புரை மாண்பு நோக்கியதன்று. ஓர் அரசன் நட்பு நிலையில் மற்றோர் அரசனின் குடிகட்கு நேரடியாக ஏதேனும் எழுதுவது இயல்புமன்று; முறையுமன்று.

கீழ்வரும் அசோகன் கல்வெட்டுச் செய்தியை நோக்குக.

2ஆம் பாறைக் கல்வெட்டு

(உவில்சன் (Wilson) மொழிபெயர்ப்பு)

"In all the subjugated territories of the king Priyadasi, the beloved of the gods, and also in the hordering countires, as Choda, Palaya (or Paraya) Satyaputra, Keralaputra, Tambapani it is proclaimed, and Antiochus by name the Yona (or Yavana) raja and those princes who are nearer to or allied with that monarco, universally are apprised that two designs have been cherished by Priyadasi, one (design) regarding men, and one relating to animals; and whatever herbs are useful to men or useful to animals wherever there are none, such have been everywhere caused to be conveyed and planted and roots and fruits wherever there are none, such have been everywhere conveyed and planted; and on the roads wells have been caused to be dug, and trees have been planted for the respective enjoyment of animals and men."

(Corpus Inscriptionum Indicarum, Vol I. pp. 117-8)

இதில் `Palaya' என்றது பாண்டியனை; Tambapani (தாம்பிரபரணி) என்றது இலங்கையை. அசோகன் கல்வெட்டுச் செய்தி சேர சோழ பாண்டிய சத்தியபுத்திரராகிய அரசரையே நோக்கியதென்பது. இதனால் தெள்ளத் தெளிவாம். மேலும் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது வடவெல்லைப் புறத்திலேயே யன்றித் தமிழகத்துள்ளன்று. அதனால் தமிழ்ப் பொதுமக்கள் அதனை அறிந்தேயிரார்; கண்டிரார் என்பதைச் சொல்லவே வேண்டுவ தின்று.

ஒரு மொழியிற் குறுங்கணக்காகவேனும் நெடுங்கணக்காகவேனும் வண்ணமாலை ஏற்படுவது, அறிஞராலேயேயன்றிக் கல்லாப் பொது மக்களாலன்று. ஆகவே, தமிழப் பொதுமக்கள் அசோகன் கல்வெட் டினின்று தமிழெழுத்தைக் கற்றுக்கொண்டது, முடவன் முண்மரமேறிக் கொம்புத்தேனைக் கொணர்ந்த செய்தியே யாகும்.

இனி, எழுத்தின்றியே சமற்கிருத இலக்கணம் தோன்றினாற் போன்று தமிழிலும் தோன்றியிருக்கலா மென்றும், தொல்காப்பியத்திலுள்ள இலக்கணக் குறிப்புகளெல்லாம், பிற்காலத்தனவென்றும், பர். தெ.பொ.மீ. கூறியிருப்பது, அவருக்குத் தமிழிலக்கணத்தைப் பற்றித் தெளிவான கருத்தின்மையைத் தெளிவாகக் காட்டும்.

இலக்கணம், இலக்கியம் என்னும் சொல் வரலாறு பின்னர்த் தெரி

விக்கப்படும்.