பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறுப்புரை மாண்பு


134

மறுப்புரை மாண்பு மிகுதியால் அது ஒலிவடிவோ டொன்றியது போலத் தோன்றுவதாலும், எழுத்து என்னும் சொல் வரிவடிவைக் குறிப்பதுடன் ஆகுபெயர் முறையில் ஒலிவடிவையுங் குறிக்கும். இவ் வொலிவடிவுப் பொருளில் அஃது இருமடியாகு பெயராகும்.

ஓவிய வரைவைக் குறிக்கும் எழுத்து (எழுதுதல்) என்னும் சொல்லே, வரிவரைவையுங் குறிக்கும், வரிவடிவும் ஒருவகை யோவியமாதலின், எழுதுதல் வரைதல்.

"Letter. Fr. lettre, L. litera, from lino. litum, to besmear, an early mode of writing being by graving the characters upon tablets smeared over with wax, என்று The Imperial Dictionary என்னும் ஆங்கில அகராதியிற் குறித்திருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.

எழு என்னும் பகுதியினின்று எழும் தொழிற்பெயர், எழல், எழால், எழில், எழுதல், எழுகை, எழூஉ என இருக்குமேயன்றி, எழுத்து என இருக்காது. ஆகவே, அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதுபோல, ஒலியை நினைத்துக்கொண்டு வரியைக் குறிக்கும் பெயர்க்குப் பகுதி கூறுவது பொருந்தாது.

4. “தென்சொற்கட்குப் பொருள் விளக்கவந்த புத்தகத்திற் சில வட சொற்களும் தென்சொற்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.

வடசொற்களிவை, தென்சொற்களிவை யென யான் அறியாம லில்லை. சில வடசொற்கள் தமிழில் வழக்கூன்றி யுள்ளமை காரணமாகத் 'தன்னின முடித்தல்' என்னும் உத்திபற்றி அவற்றைத் தொடர்புடைய தென்சொற்களொடு சேர்த்துக் கூறியிருக்கின்றேன். அங்ஙனம் கூறப் பட்டவை இரண்டொன்றே. அவற்றை வடசொல்லென விதந்து குறித்து மிருக்கின்றேன். அங்ஙனங் குறிக்கப்படாதவை யெல்லாம் தென்சொல் லாகவே யிருக்கும். அவற்றை யெல்லாம் அல்லது அவற்றுள் ஒரு பகுதியைச் சாத்திரியார் அவர்கள் வடசொல்லென மயங்கியிருப்பார்களா யின், அது அவர்களது குற்றமேயன்றி என் குற்றமன்று.

5. "ஆசிரியர் மொழியொலி நூல் (Phonology), சொல்வடிவு நூல் (Morphology), பொருட்பாட்டு நூல் (Semasiology), ஆகியவற்றைப் பயின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.'

கடந்த இருபானாண்டுகளாக மொழிநூலில் மூழ்கிக் கிடந்த எனக்கு, மீன்குஞ்சுக்கு நீச்சுப் பயிற்றுவதுபோலும், கொல் தெருவில் குண்டூசி விற்பதுபோலும், சாத்திரியார் அவர்கள் மொழிநூல் துறைகளை யுணர்த்த விரும்பியது, மிக வியப்பை விளைக்கின்றது.

'பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழா கொழகொழா' என்பது ஒருபுறமிருக்க, வடமொழியை இயன்மொழியாகவோ, தமிழுக்கு முந்திய மொழியாகவோ கொள்பவ ரெல்லாம், ஒப்பியன் மொழிநூல்