பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரல் சட்சமே; மத்திமமன்று

9


குரல் சட்சமே; மத்திமமன்று

9

"குரலிற் பாதியும் தாரத்திலொன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்ற ஓரலகை விளரியின்மே லேறட விளரி குரலாய்ப் படுமலைப் பாலையாம்” என்று அடியார்க்குநல்லார்(சிலப். 8:35) ஒரு நூற்பா விற்கு உரை கூறுவதை நோக்குமிடத்து, பண்ணுக்கேற்றபடி அலகு பகுத்துக் கொடுக்கப்படும் என்பதை அறியலாம்.

“குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாங்

குரையா உழைஇளி நான்கு விரையா

விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்

என்று கூறியது, ஒரு பண்ணுக்குரிய அலகுப் பகுப்பே யன்றி மொத்த அலகுக் கணக்கன்று. முதலிலிருந்து இறுதிகாறும் இசையிலக்கணங்களை யெல்லாம் தொடர்பாகக் கூறுகின்ற பண்டை இசைத்தமிழ் நூல்களுள் ஒன்றேனும் இன்று முழுமையாகக் கிடையாமையால், ஆங்காங்குத் தனித்துநிற்கும் ஓரொரு நூற்பாவை மட்டுங் கொண்டு இசைத்தமிழியல்பு முழுவதையும் துணிந்துவிட முடியாது.

CC

'ஆயத்துக் கீரா றறுநான்கு வட்டத்துக் கேயுங்கோ ணத்துக் கிரட்டிப்புத்

தூயவிசை

நுண்மைக் கதிலிரட்டி நோனலகு மோர்நிலைக்கிங் கெண்மூன்று கேள்விகொண் டெண்

99

என்பது இசைமரபு. இதில் அலகு 24 எனத் தெளிவாகக் கூறியிருத்தல் காண்க. இசை நுண்மை-நுண்பாலை-சதுரப்பாலை. அலகு 24 (சதுர்விம்சதி) என்று கணக்கிட்டுக் கூறும் வடமொழிச் சுவடியிரண்டும் தெலுங்குச் சுவடியொன்றும் இன்றும் தஞ்சைச் சரசுவதி மகாலில் உள

ம்

11. குரலை மத்திமமாகக் கொண்டு பறவையோசையால் ஒப்புக் காணுமிடத்து நாற்சுரங்களேனும் ஒத்துவருகின்றனவே என்கிறார் நம் நண்பர். கல்லாட மேற்கோளை நோக்குமிடத்து அந் நான்கும் இல்லாமற் பறந்துபோகின்றனவே! மேலும், தமிழ்நூற்கும் வடநூற்கும் பறவை விலங்குத் தொடுப்பிலுள்ள ஒப்புமைகூடத் தன்னேர்ச்சியே (accidental) யன்றி வேறன்று. இத்தகைய தன்னேர்ச்சிகள் பல துறையிலும் காணலாம். (எ-கா:) உண்மை வாய்மை மெய்ம்மை. இவை முக்கரணம் பற்றியவை என்பது பொதுக் கொள்கை. யானும் இதற்குடம்பட்டு எனது மொழிநூலிற் கூறினேன். ஆனால், இற்றையாராய்ச்சியால் அது தன்னேர்ச்சி யென்று பட்டுவிட்டது. உள்ளது உண்மை; வாய்ப்பது வாய்மை; மெய் (உடம்பு) போன்றது மெய்ம்மை. ஒ.நோ: E. substance-substantial = true. முற்காலத்தில் கட்புலனும் மெய்ப்புலனுமானதே உண்மை யென்று கொள்ளப்பட்டது. இயேசு உயிர்த்தெழுந்த பின் தோமா என்னும் மாணவன் அவரைத் தொட்டுப் பார்த்துத்தான் நம்பினானென்று கிறித்தவ மறையிற் கூறப்பட்டுள்ளது.