பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?

49


பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?

49

மேனாட்டினின்று வந்த வண்டிவகைப் பெயர்களுள் புகைவண்டி (train), மிதிவண்டி (cycle) என்பன பொதுமக்களிட்டவை; மின்வண்டி (train), இயங்கி (motor) என்பன புலமக்க ளிட்டவை.

மக்கட்குத் தாய்மொழி யுணர்ச்சியும் தூய்மை போற்றும் எண்ணமு மிருப்பின், வெளிநாட்டினின்று வந்த எப்பொருட்கும் தமிழ்ப்பெயரிடுவது அரிதன்று. உள்நாட்டுப் பொருள்கட்குப் பெயரிடும் நெறிமுறைகளே, வெளிநாட்டுப் பொருள்கட்குப் பெயரிடுவதையும் தழுவும். ஒரு பொருளுக்கு முதலில் அதன் சிறப்பியல்புபற்றிப் பெயரிடப்பெறும். பின்பு அதையொத்த பொருள்கட்கெல்லாம் அப் பெயரே வெவ்வேறு ஏற்ற அடை மொழி கொடுத்திடப்பெறும்.

எ-கா : வெம்புங்காலத்தில் அல்லது நிலத்தில் தழைப்பது வேம்பு. அதையொத்தவை, நாய்வேம்பு, கறிவேம்பு, நிலவேம்பு முதலியவை.

சில இனப்பொருள்கட்கு வெவ்வேறு பெயரும் இடப்பெற்றுள். எ-கா : தட்டையாயிருப்பது தட்டைப்பயறு அல்லது தட்டான் பயறு; கருத்துத் திரண்டிருப்பது காராமணி; வரியுடையது வரிக்கொற்றான். இடங்கர், கராம், முதலை என்னும் உயிரிவகைப் பெயர்களும் இம் முறை பற்றியனவே.

தண்டோடு ஒட்டியிருப்பதைத் தாள் என்றும். அது நீண்டு தொங்கின் தோகை என்றும், திண்ணமாயிருப்பின் ஓலை யென்றும், மெல்லியதா யிருப்பின் இலை என்றும், மாம்பிஞ்சை வடுவென்றும், பலாப்பிஞ்சை மூசு என்றும், வாழைப்பிஞ்சைக் கச்சல் என்றும், வேறுபடுத்துச் சொன்ன நுண்மாண் நுழைபுலத் தமிழர்க்குப் பெயரிட அரிதாம் பொருள் இவ் வுலகத்தில் ஏதேனும் உண்டோ? இவ் வாற்றல் இன்னும் அழியா திருப்பதை நாஞ்சில் நாட்டு வைத்தூற்றி (Funnel) என்னும் சொல்லிற் காண்க.

தமிழரின் தாய்மொழியுணர்ச்சி முதற்கண் ஆரியத்தாலும் பின்னர் வேற்றரசுகளாலும் பெரும்பாலும் கொல்லப்பட்டது. கொண்டான்மாரும் புத்தமித்திரன்மாரும் சுவாமிநாத தேசிகன்மாரும் வையாபுரிகளும் பல்கினர். செந்தமிழைக் காக்கும் நக்கீரர்க்கும் பொய்யாமொழியர்க்கும் படிக்காசர்க்கும் பிழைப்பில்லாது போயிற்று. ஆங்கிலர் ஆட்சியாலும் ஆங்கிலக் கல்வியாலும் தமிழருள் ஒரு சாரார்க்குப் புத்துணர்ச்சி பிறந்தது. அதன் விளைவாக மறைமலையடிகள் தோன்றினர். தமிழ் புத்துயிர் பெற்றது. அது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருங் காலத்தில், ஆரியம் மீண்டும் தலையெடுத்து அதை அழித்து வருகின்றது. அதற்கு அடிதாங்கி நிற்பவர் பேரா.தெ.பொ.மீ.யே. தமிழாசிரியர் தமிழ்ப் பற்று, தொடக்கப்பள்ளிப் பதவியினின்று பல்கலைக்கழகத் தலைமைப் பதவிவரை மேனோக்கிச் செல்லச் செல்லக் குன்றிக்கொண்டே போய்,