பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறுப்புரை மாண்பு


78

மறுப்புரை மாண்பு அறிவாராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழை முன்போல் வழிபாட்டு மொழியாகாதவாறு தடுத்து, அதன் தூய்மையை இயன்றவரை கெடுத்து, தமிழ்க் கலையறிவியல் மூல நூல்களையும் வடமொழி மொழிபெயர்ப்பு நூல்களின் வழியினமாகக் காட்டிவருகின்றனர்.

ரு

6

இதற்குமேல், வடநாட்டு இந்தியாரும் இன்னொரு கொல்குறும்பாகத் தோன்றியுள்ளனர். வடமொழியும் இந்தியும் ஒன்றுக்கொன்று துணை செய்கின்றன. இவ் விரண்டையும் ஏற்கும் பேராயத் தமிழர் உட்பகையாக மாறியுள்ளனர்.

பர். தெ.பொ.மீ.

இவர் வையாபுரிப் பிள்ளையை அடியொற்றிச் செல்பவர்; மாந்தன் தோன்றியகத்தையும் தமிழன் பிறந்தகத்தையும் ஆரியம் தோன்றிய வகையையும் ஆராய்ந்தறியாதவர்; தமிழின் குமரிநாட்டுத் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதவர். தமிழரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை நாடுகளி னின்று வந்தவ ரென்று வாயினாற் சொல்லாவிடினும் உள்ளத்தில் ஒப்புக் கொள்பவர்; தமிழ் வேர்ச்சொற்களை அறியாதவர்; அதனால் ஆரியத்தை முதன்மையாகவும் தமிழை வழிநிலையாகவும் வைத்து மொழியிலக்கிய வரலாறுகள் எழுதி வருபவர் (History of the Tamil Language, A History of Tamil Literature), இவர் 'தமிழ்க் கலைக் களஞ்சியத்தில்' சில கட்டுரைகளும் வரைந்துள்ளார். அடிப்படை தவறானபடியால் முடிபுகளும் பெரும்பாலும் தவறாகவே யிருக்கும். இவர் இறுதியாக எழுதி 1974-ல் வெளியிட்ட ஆங்கில நூல், தமிழிலக்கணத்தில் அயன்மொழியமைப்புகள் என்று பொருள்படும். ‘Foreign Models in Tamil Grammar’ என்னும் தலைப்புக்கொண்டது. “எகர ஒகரத் தியற்கையு மற்றே" (நூன்மரபு, 16) என்னும் தொல்காப்பிய நூற்பா இவர் முடிபிற்குப் பெருந் துணை செய்வதாகத் தோன்றுகின்றது.

தொல்காப்பியம் இயற்றமிழிலக்கணம் முழுவதையும் ஓரளவு விரிவாகக் கூறும் ஒரே பண்டை நூலாயினும், இடையிடைப் பல படுகுழி களையும் கவர்வழிகளையும் கொண்டிருப்பதால், தமிழ் வேர்ச் சொல் லாராய்ச்சியும் தமிழன் பிறந்தக ஆராய்ச்சியும் இல்லாதார் எத்துணைத் தென்மொழியும் வடமொழியும் கற்றிருப்பினும், தொல்காப்பியத்தை மொழி வரலாற்றிற்குப் பயன்படுத்த இயலாது.

இந் நூலை இவரைக்கொண்டு எழுதுவித்தது, கேரளப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த V.I.சுப்பிரமணியம், கன்னடப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த R.C. இரேமத்து (Hiremath), திருப்பதிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த K. மகாதேவ சாத்திரி (Sastri) ஆகிய மூவர் குழு. இம் மூவருள் முதல்வர் தமிழைத் தலைகீழாகப் படித்தவர்; ஏனையிருவர் தமிழறியாத பெருமாளர்.