பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

செந்தமிழ்ச் சிறப்பு

சாத்திரத்தினின்று நடமும் நாடகமுங் கற்றுக்கொண்டனர் என்றும், கொச்சைத் தமிழையும் செந்தமிழ்போற் கொள்ளவேண்டு மென்றும், அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற் றென்றும், வடமொழி தேவமொழி யென்றும், பிராமணர் நிலத்தேவர் என்றும், திருக்கோயில் வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டுமென்றும், இந்தியை எதிர்த்தல் கூடாதென்றும், தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்றும், பிறவாறுந் தமிழுக்கு மாறாகவும் கேடாகவும் சொல்வாரும் எழுதுவாரும் எல்லாம் தமிழ்க்கழகத்தில் இடம்பெறத் தக்காரல்லர்.

தமிழை முழுத்தூய்மையாகப் பேசாவிடினும், இயன்றவரை தூய்மையாகப் பேச முயல வேண்டும்; தமிழ்ப்பெயருந் தாங்க வேண்டும். உலகப் பொதுமை

இன குல மத இட கட்சி வேறுபாடின்றித் தகுதியொன்றேபற்றி, எல்லாருஞ் சேர்தற்கேற்ற கழகமா யிருத்தல் வேண்டும்.

இருப்பிடம் மதுரை.

நடைமுறை

66

பல்துறைப்பட்ட தமிழாராய்ச்சியே தமிழ்க்கழகத்தின் தலைமைப் பணியாயிருத்தல் வேண்டும். பண்டைத் தமிழ்க்கழகங்களும் செய்த பணி இதுவே. "அவர் தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப”, 'அவர் தமிழாராய்ந்தது கபாடபுரம் என்ப”, “அவர் தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப”, என்றே முக்கழகப் பணியும்பற்றி முக்கழக வரலாறு கூறுதல் காண்க. "சிறைவான்...உயர்மதிற் கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழ்’ என்றே மாணிக்கவாசகரும் பாடியிருத்தல் காண்க.

ஆராய்ச்சித் தகுதி, மதிநுட்பம், பரந்த கல்வி, நடுநிலைமை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறி யவா என்னும் ஆறாம். இவ் வாறும் இல்லார் போலியாராய்ச்சியார், பொருளீட்டவே வல்லார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இக் கழகமும் ஒன்றாகவே யிருக்கலாம்.

உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை மதுரையிலேயே யிருப்பதால், அடிக்கடி சென்று கழக ஆராய்ச்சியை மேற்பார்த்து வரலாம். நாடாட்சித் தலைவர் (முதலமைச்சர்) பாண்டியன்போல் என்றும் நிறுவனத் தலைவராயிருப்பார்.

ஆண்டுதோறும் ஆட்டைவிழாவும் அரங்கேற்றமும் நிகழலாம். அரங்கேற்றமும் பரிசளிப்பும் பண்டை நாட்போன்றே நடந்தேறல் வேண்டும். கழகத்தில் அரங்கேறிய நூலே நாட்டில் உலவுதலும் நிலவுதலும் வேண்டும்.