பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதுரைத் தமிழ்க் கழகம்

செலவு பொருள் வருவாய்கள்

103

தமிழ்நாட்டரசு ஒதுக்கீடு, நடுவணரசு ஒதுக்கீடு, திரவிடநாடுகளின் ஒதுக்கீடு, பெருஞ்செல்வர் நன்கொடை, தமிழ்நாட்டுத் திருமடங்களின் திருத்தானம், திருப்பதி வேங்கடவர் திருவீகை, பல்கலைக்கழகங்களின் பணவுதவி, ஒன்றிய நாட்டினங்களின் கல்வியறிவியற் பண்பாட்டுக் கழக (UNESCO) ஒப்புரவுத்தொகை, பல்கலைக்கழக நல்கைக் குழு (U.G.C.) நல்கை முதலியன கழகச் செலவிற்குப் பொருள்தேடும் வழிவகைகளாம். கழகப் பெயர்

முதலிரு கழகங்களும் கழகம், கூடல், தொகை, அவை, மன்றம் முதலிய சொற்களாலேயே குறிக்கப்பட்டு வந்தன. அக் காலத்தில் ஆரியம் என்னும் பேரும் தோன்றவில்லை. சங்கம் என்னும் வடசொல் கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே சமணரொடு தமிழகம் புகுந்திருத்தல் வேண்டும்.

பதினாறாம் நூற்றாண்டினரான பரஞ்சோதி முனிவர், தம் திருவிளை யாடற் புராணத்தில், “கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து” என்று பாடியிருப்பதால், இன்றும் கழகம் என்னும் சொல்லையே ஆளலாம். வடமொழியிற் சங்கம் என்னும் சொல் ஸம்கsamga) என்னும் வடிவுபெறும். அதை samgha என்றும் திரித்து ஸம்ஹன் என்பதன் திரிபாகக் கூறுவர். ஸம்க என்னுஞ் சொற்கு உடன்செல்லுதல் அல்லது ஒன்றுசேர்தல், கூடுதல் என்பதே பொருள்.

கும்முதல் = கூடுதல், குவிதல். கும் கூடுதல், குவிதல். கும் கும்மல் (குவியல்) கும்மல் (குவியல்) – L. cumu- lus, heap. உம் கும் கும்பு - கும்பல்.

உம் -

கும்மலிடு - L. cumulate.

கும் – L. cum E. cum, com.

-

L. cum(கும்), Gk. sum(ஸும்), Skt. sam(ஸம்) = உடன், கூட. E. sym. ஏ(ஏகு) - யா - இ. ஜா, கா(ga); E. g0, Skt. gam, to go.

Skt. gam - ga, samga = to go together, to unite.

samgha=combination, collection, assembly, association, society.

இதனால், சங்கம் (ஸம்க) என்னும் வடசொல்லும் தென்சொல்லின் திரிபே என்று தெரிந்துகொள்க. ஆகவே, கழகம் என்னும் சொல்லே இருமடிப் பொருத்தமாகும்.

உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டின் பயன்பாடு

இதுவரை நடைபெற்ற நான்கு மாநாடுகளாலும் தமிழுக்குக் கேடேயன்றி, ஒரு நலமும் விளைந்ததில்லை. அவற்றை நடத்திவருவது ஒரு வையாபுரிக்குழு. எனக்கும் என் போன்றார்க்கும் ஓர் அறிவிப்புக்கூட