பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

101

மாபெருந் தமிழினம் சின்ன பின்னமாகச் சிதைவுண்டதென்றும், தெரிவிக்கப் போதிய சான்றாம்.

2. பொருட்டிரிவு முறைகள் (Semantic Changes)

(1) உவமையாகு பெயர்

சில பெயர்கள் உவமை யடிப்படையில் அமைந்துள்ளன.

எ-டு: மாங்காய்-மாங்காய்போன்ற நெஞ்சாங்குலை

தக்கட்டி-தக்கட்டிக்காய்

பட்டைக் கட்டி(sty).

அல்லது கனிபோன்ற

எருமை நாக்கு-எருமைநாக்குப் போன்ற மீன். கிளிமூக்கு-கிளிமூக்கு வடிவான மாம்பழம்.

சில பொருள்களின் பெயர், பண்பியாகுபெயர் முறையில் அப் பொருள்களின் நிறத்தைக் குறிக்கின்றன.

எ-டு: சாம்பல் வாழை, காக்கைப் பிசின், பவழச் சோளம், குருதிக்காந்தள், பொற்கொன்றை, மயிற்கழுத்துச் சில பெயர்கள் உவமைத் தொகையாய்

சேலை.

அமைந்துள்ளன.

எ-டு: ஆரால்மீ னவரை. கோழிக்கால் தையல், பாம்புக் கற்றாழை, வௌவால் மீன்.

சில பெயர்கள் உவமை யடிப்படையில்

தெளிவுபற்றி ஈறு பெற்றும் திரிந்தும் உள்ளன.

எ-டு: ஆனைக்கொம்பன்-ஒருவகைச் சம்பாநெல்.

அமைந்து,

காடைக்கண்ணி-காடைக்கண் போன்ற ஒருவகைச் சிறு தவசம் (தானியம்), அதன் பயிர்.

குதிரைவாலி-குதிரைவால்போற் கதிர்தள்ளும் ஒரு வகைச் சிறு தவசப் பயிரும் அத் தவசமும்.

நுணா-நுணல் (மணல் தவளை) போன்ற காய் காய்க்கும்

மரவகை.

(2) மூவகைத் தகுதி வழக்கு

இடக்கரடக்கல் (Euphemism), மங்கலம் (Euphemism), குழூஉக் குறி (Conventional terms) என்னும் மூவகைத் தகுதி வழக்கு முறை யிலும், சில சொற்களும் வழக்காறுகளும் தோன்றியுள்ளன.