பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

தமிழ் வரலாறு






'அகரத் திம்பர் வகரப் புள்ளியும்

ஒளஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்'

என்று தொல்காப்பியர் கூறாதுவிட்டது!

உயிரெழுத்துகளுள் ஐ, ஒள இரண்டும் புணரொலியன்கள் (diphthongs or compound phonemes); ஏனைய தனியொலியன்கள் (monoph - thongs or simple phonemes).

உயிர் தோன்றிய வகைகள்

(1) அங்காத்தல் (வாய்திறத்தல்) - அ, ஆ

(2) சுட்டல் - ஆ, ஈ, ஊ

-

(3) மோனைத்திரிபு இ-எ, உ-ஒ

(4) உணர்ச்சியொலி - ஐ!

(5) வாய்ச்செய்கை - அவ்-ஒள

(6) குறுக்கம் - ஆ-அ, ஏ-எ எ

(7) ஒப்பொலி - ஊ (கூ)

அங்காத்தல் என்பது மற்றெல்லா வகைகட்கும் அடிப் படைத் துணையேயன்றி, தனிவகையன்று.

மெய் தோன்றிய முறை

ப, க, ங

ல, ர, த, ந

ச, ஞ, ய, வ

ட, ண, ள, ழ ற, ன

குறிப்பு:

(1) உயிரும் மெய்யும் தோன்றிய முறையாக இங்குக் காட்டப் பட்டுள்ள ஈரொழுங்கும், தோராய (உத்தேச) முறையே யன்றி, இம்மியும் வழுவாத அறிவியலின் பாற்பட்ட துல்லிய முறையல்ல.

(2) உயிரும் மெய்யும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருப் பினும், உயிரெல்லாந் தோன்றியபின் மெய் தோன்றின வென்றாகாது. இருவகையும் ஒவ்வொன்றாய் அல்லது ஒன்றும் பலவுமாய் மாறிமாறியே தோன்றின.