பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

இறுதிநிலை யெழுத்துகள்

129

ஆய்தமும் வல்லினமெய்யும் சொல்லிறுதியில் வரவே வரா; பிற மெய்களும் உயிர்மெய்யும்தான் வரும்.

நாஇ (நாய்) என்று எழுதப்பெற்ற பண்டைவழக்கு இன் றில்லை. உயிர்க்குறில் சொல்லிடையிற்போன்றே சொல்லிறுதி யிலும் அளபெடைக் குறியாய் வரும்.

ர், ழ் என்பன தனிக்குறிலுக்குப்பின் சொல்லீறாய் வருவ தில்லை.

தமிழில் எச்சொல்லிலும் எவ்விடத்திலும் பிறமொழி யெழுத்தும் எழுத்துமுறையும் வருதல் கூடாது. பிறமொழிச் சொல் இன்றியமையாததும் மொழிபெயர்க்க முடியாதது மாயின், தமிழ் முறைக்கேற்பத் திரித்தெழுதப்பெறும். இங்ஙனம் வரம்பீடு செய்யாக்கால், தமிழ் நாளடைவில் வேறு மொழியாய் மாறிவிடும். இதனாலேயே, வட சொல்லைச் செய்யுட் சொல்வகை நான்கனுள் ஒன்றாகக் குறித்த தொல்காப்பியரும், முன்னோரிட்ட வரம்பை மீறாது,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'

என நெறிவகுத்தார்.

(884)

சொன்முதல் வராவெழுத்தை முதலிற்கொண்ட பிற மொழிச் சொற்கள் தமிழில் எழுதப்பெறின், அவற்றின் முதலெழுத்து நீக்கப் பெறும்; அல்லது மாற்றப்பெறும்; அல்லது அதை மாற்றியோ மாற்றாதோ, அதன்முன் ஓர் உயிர்க்குறில் சேர்க்கப்பெறும்.

எ-டு.

பிறமொழிச்சொல்

ஸ்காட்லாந்த்

யூரோப்பியன்

ஸ்பெயின்

ரஷியா

தமிழ்ச்சொல்

காட்டிலாந்து,காத்திலாந்து

ஐரோப்பியன்

இசுப்பெயின்

இரசியா

தமிழுக்கொவ்வாத மெய்ம்மயக்கத்தை இடையிற் கொண்ட சொல்லாயின், அது தமிழுக்கேற்றவாறு மாற்றப்பெறும்.

எ-டு: ஷேக்ஸ்பியர்-சேக்கசுப்பியர்

வல்லினமெய்யும் அயலெழுத்தும் இறுதியிற்கொண்ட சொல் லாயின், அதன்பின் ஓர் உயிர் அல்லது உயிர்மெய் சேர்க்கப்பெறும்; அல்லது அதன் இறுதி மாற்றப்பெறும்.