பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

133

தெரியாத அருஞ்சொற்களைத் தொகுத்துப் பொருள் உரைத்துக் கொண்டனர். இதன் விளக்கம் பின்னர்க் காண்க.

(1) பெயர்ச்சொல்

து

ஒரு பொருளின் பெயரே பெயர்ச்சொல். பெய்வது பெயர்; பெய்தல் - இடுதல். பெயரிடுதல் என்னும் வழக்கை நோக்குக.

என

பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுபொருள்பற்றி, அறுவகைப்படும்; இருதிணைபற்றி, உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை மூவகைப்படும்; மூவிடம் பற்றி, தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும். சினை = உறுப்பு.

இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுத்திணைப் பெயர் அல்லது விரவுப்பெயர் எனப்படும்.

எ-டு: ஆண், பெண், தாய், பிள்ளை.

தன்மை முன்னிலைப்பெயர்கள், எண்பற்றி ஒருமை பன்மை என இருவகைப்படும். படர்க்கைப் பெயர்கள், பால்பற்றி ஆண்பால், பலர்பால், ஒன்றன்பால்,

பெண்பால்,

ஐவகைப்படும்.

1. மூவிடப் பகரப்பெயர் (Personal Pronouns)

தன்மைப்பெயர்: ஒருமை

பலவின்பால்

என

பன்மை

இரட்டைப்பன்மை

முதல்நிலை

ஏன்

ஏம்

ஏங்கள்

2ஆம் நிலை

யான்

யாம்

யாங்கள்

3ஆம் நிலை

நான்

நாம்

நாங்கள்

தன்மைப் பெயரின் வேற்றுமை யடிகள்

ஏன்

ஏம்

யான் என்

யாம் -எம்

நான்-நன்

நாம்-நம்

ஏங்கள்

யாங்கள்-எங்கள்

நாங்கள்-நங்கள்

பயர்

யாங்கள் என்னும் தனித்தன்மைப் பன்மைப் வழக்கற்றுப் போனதினால், இன்று அதன் இடத்தில் நாங்கள் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப்பெயர் உளப்பாட்டுப் பொருளையிழந்து வழங்குகின்றது.

தன்

ஏ என்பது உயர்ச்சி குறித்தலால், இயல்பாக மாந்தனுக் குள்ள நான் என்னும் செருக்கு அல்லது தன்னலம்பற்றி, அதை அடியாகக்