பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

தான்-தன் தாம்-தம் தாங்கள்-தங்கள்

135

ஆ என்னும் சேய்மைச் சுட்டடியினின்று பிறந்துள்ள தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள், அவன், அவள் முதலிய ஐம்பாற் சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், தற்சுட்டுப் பெயர்களாய் (Reflexive Pronouns) மாறிவிட்டன. 'Auto' என்னும் கிரேக்கச் சொல்லும், முதலிற் சுட்டுப் பெயராயிருந்து பின்பு தற்சுட்டுப் பெயராய் மாறியுள்ளமை இங்குக் கவனிக்கத் தக்கது.

இக்காலப் படர்க்கைச் சுட்டுப்பெயர்கள் (Demonstrative Pronouns)

சேய்மைச் சுட்டுப்பெயர் : அவன், அவள், அவர், அது, அவை

அண்மைச் சுட்டுப்பெயர் : இவன், இவள், இவர், இது,

முன்மைச் சுட்டுப்பெயர் : உவன், உவள், உவர், உது, உவை

வை

இவை முன்னர்க் காட்டிய அவ், இவ், உவ், அல், இல், உல் என்னும் சுட்டடிகளினின்று தோன்றியவையாகும்.

அல்-அது, இல்-இது, உல்-உது.

உகரச் சுட்டடிப் பெயர்கள் இற்றைத் தமிழ்நாட்டில் வழக்கற்றன; ஆயின், யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது. அவர்கள், இவர்கள், உவர்கள் என்பன இரட்டைப் பன்மை வடி வங்களாகும்.

மக்கள் நாகரிகமடைந்தபின், அகவை அறிவு அதிகாரம் முதலியவற்றில் இழிந்தோனைக் குறிக்க ஒருமைப் பெயரையும், ஒத்தோனைக் குறிக்கப் பன்மைப் பெயரையும், உயர்ந்தோனைக் குறிக்க இரட்டைப் பன்மைப்பெயரையும், முன்னிலையிலும் உலகவழக்கேயன்றிச்

படர்க்கையிலும் பயன்படுத்தினர். இது

செய்யுள் வழக்கன்று.

தன்மையிடத்திற்கு இரட்டைப்பன்மை வேண்டா விடினும், ஒப்புமைபற்றி அதிலும் அமைந்துள்ளது.

மேற்காட்டிய மூவிடப்பெயர்களுள், ஐம்பாற் சுட்டுப் பெயர் தவிர னைய வெல்லாம், னகர மெய்யீற்றால் ஒருமை யையும் மகர மெய் யீற்றாற் பன்மையையும், ஒழுங்காய் உணர்த்துகின்றன. இவ்வீறுகள் தோன்றிய வகை வருமாறு:

ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்றாதல்.

ஒல்-ஒன் = ஒன்று. ஒன்-அன். ஒ.நோ: E one-an.