பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

175

சொல்லலாம். இது அகரவீற்று வினை யெச்சத்துடன் அட்டு என்னும் துணைவினை சேர்ந்தது. இது எதிர்மறையில் வராது.

எ-டு:

ஒருமை: அவன் வரட்டு = நீ அவனை வரவிடு. பன்மை: அவன் வரட்டும் = நீர் அவனை வரவிடும்.

வரட்டும் என்பது வரவொட்டு என்பதன் தொகுத்தல். ஒட்டுதல் இசைதல். ஒட்டு-அட்டு. வர+அட்டு = வரட்டு. வர+அட்டும் = வரட்டும், செய்யவொட்டு என்னும் திரியா வடிவம் வினையாயின் மூவிடத்தும் வரும். அது பெரும்பாலும் எதிர்மறையிலேயே வரும்.

எ-டு:

தூங்கவொட்டேன், தூங்கவொட்டாய், தூங்கவொட்டார்.

(8) தடை நீக்கவினை

பிறர் விரும்பின் ஒன்றைச் செய்வதற்குத் தடையின்மையைக் குறிக்கும் வினை தடை நீக்க வினையாம்.

எ-டு:

நீங்கள் போகலாம்.

(9) ஆற்றல்வினை (Potential Mood)

ஒன்றைச் செய்ய முடிதலைக் குறிக்கும் வினை ஆற்றல் வினையாம். இது மூவகையில் அமையும்.

1.

கூடும்.

அகரவீற்று வினையெச்சத்தோடு இயல் (ஏல்), ஒண்ணு, ஒல்லு, மாள், முடி, கூடு, முதலிய துணைவினைகளுள் ஒன்றுசேர்தல். கூடு என்னும் துணைவினை உடன்பாட்டில் மட்டும் வரும், ஏனைய உடன்பாடு எதிர்மறை ஆகிய இருவடிவிலும் வரும். இவையெல்லாம் தமித்துத் தலைமை வினையாகவும் வரும்.

எ-டு:

வரவியலும், தரவொண்ணும், செய்யவொல்லும், செய்யமாளும், எழுதமுடியும், தேறக்கூடும்.

ஒண்ணும்,ஒல்லும்,

அது என்னால் இயலும், ஒண்ணும், ஒல்லும், மாளும், முடியும்;

வரவியலாது, தரவொண்ணாது, செய்யவொல்லாது, முடியாது. செய்ய மாளாது. எழுத முடியாது.