பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

தமிழ் வரலாறு






அது என்னால் இயலாது, ஒண்ணாது, மாளாது, முடியாது.

2. அகரவீற்று வினையெச்சத்தோடு கில் அல்லது மாட்டு என்னும் துணைவினையின் முற்றுச்சேர்தல்.

கில் என்பது முக்காலத்திலும் வரும்; மாட்டு என்பது எதிர்காலத்தில் மட்டும் வரும்.

மாட்டு என்பது மாள் என்பதன் பிறவினை. மாளுதல் முடிதல்; மாட்டுதல் முடியச்செய்தல்.

எ-டு:

செய்யகின்றேன், செய்யகிற்கின்றேன், செய்யகிற்பேன். செய்யமாட்டுவேன் = முடியச்செய்வேன், என்னாற் செய்ய முடியும்.

3. அகரவீற்று வினையெச்சத்தோடு படவில்லை என்னும் கூட்டு வினைச்சொல் சேர்தல். இது உடன்பாட்டில் வராது.

எ-டு:

(என்னால்) எழுந்திருக்கப்படவில்லை எழுந்திருக்கமுடிய வில்லை.

=

கூடு, படு என்னும் துணைவினைகள் எதிர்மறை வடிவில் விலக்கு வினையாம்.

எ-டு:

நீ போகக்கூடாது, நீ போகப்படாது.

மாட்டு, முடி என்னும் துணைவினைகள் தன்மை எதிர்மறை வடிவில் மறுப்பு வினையாம்.

எ-டு: நான் வரமாட்டேன், நான் வரமுடியாது.

(10) கேள்விப்பாட்டு வினை

பிறர் வாயிலாய்க் கேள்விப்பட்டதைக் குறிக்கும் வினை கேள்விப்பாட்டு வினையாம். இது வினைமுற்றோடும் பெய ரோடும் ஆம் என்னும் துணைவினை சேர்ந்துவரும்.

எ-டு:

நேற்றுவந்தானாம், நாளைக்கு விடுமுறையாம்.

(11) உய்த்துணர்வினை

இது மூவகையில் வரும்.