பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்பு

5

கடைக்கழகம் கலைந்து பல நூற்றண்டு கடந்த பின்பும், பாண்டியவரசின் தலைமைபோய்ப் பன்னூற்றாண்டு சென்ற பின்பும். பாண்டியனைத் தமிழ்நாடனென்று திவாகரம் சிறப்பித்த தற்கும், 'நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ்(வு)

இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்”

என்னும் பழஞ் செய்யுட்கும் ஏற்ப, பாண்டிநாட்டுத் தமிழ் இன்னும் கீழ்க்காணும் பலவகையிலுஞ் சிறந்துள்ளது.

1. பாண்டிநாட்டுப் பழங்குடி மக்கள், சிறப்பாகநாட்டுப் புறத்திலுள்ளவர், தமிழ் வல்லின மெய்யொலிகளைத் திரவிட ஆரிய மொழிகளிற்போல் மிக வலித்தும் எடுத்தும் ஒலிக்காது, பழைய முறைப்படியே பலுக்கி(உச்சரித்து) வருகின்றனர். வடசொற்களி லுள்ள வல்லொலிகளும் பொலிவொலிகளும் அவர் வாயில் நுழைவதில்லை.

எ-டு:

சாக்ஷி-சாக்கி, ஜாதி - சாதி

2. சொற்றூய்மை பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்புகளுள் ஒன்றாகும்.

எ-டு:

சிகிச்சை (வ.) - பண்டுவம் (த.)

சுத்தம் (வ.) - துப்புரவு (த.)

பாண்டிநாட்டார் சைக்கிள் (cycle) என்பதை மிதிவண்டி என்றும், நாஞ்சில்நாட்டார்புனல் (funnel) என்பதை வைத்தூற்றி என்றும், தூய தமிழ்ச்சொல்லால் வழங்குகின்றனர்.

3. நீ, நீர் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவான நீன், நீம் என்பவை, தென்பாண்டி நாட்டிலேயே வழங்கு கின்றன. நாமம் என்னும் திருமாலிய(வைணவ)க் குறிப்பெயரின் மூலமான

ராமம் என்பதும், அங்குத்தான் வழங்குகின்றது. திருமண் காப்பு இராமவணக்கம் பற்றி இராமம் என்றும், கோபால வணக்கம்பற்றிக் கோபாலம் என்றும் பெயர் பெற்றுள்ளது. கோபாலம் என்பது கோப்பாளம் எனச் சிதைந்து வழங்குகின்றது. இதுவும் தென்பாண்டி வழக்கே.

4. தொல்காப்பியத்திற் குறிப்பிட்டுள்ளபடி, படியை நாழி என்பதும், அரைப்படியை உரி என்பதும், காளையையும் ஆவையும்