பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

66

தமிழ் வரலாறு

"இப் பொத்தகம் இந்திய அரசியல் வரலாற்றைச் சுருங்கக் கூறுவதற்கே எண்ணி வரையறுக்கப்பட்டுள்ளமையால், முன் சொல்லப்பட்ட ஆராய்ச்சி வழியைப் பின்பற்றக் கூடாத வனாயிருக் கின்றேன். ஆயினும், மூவாது முடிவடைந்த ஒரு பெயர்பெற்ற இந்தியக் கல்விமான் கவனித்தறிந்தவை சில, கருத்தாயெண் ணுதற்குரிய வாதலின், அவற்றை இங்குக் கூறாதிருக்க முடியவில்லை.

அவை வருமாறு:

இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது

3

வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றை யும் படித்து, நாவல(இந்திய) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரியை(Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே(Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளை யும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே, இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர். இங்குக் கூட வரலாற்றாசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாதவாறு, ஆரியம் மிக நன்றாய் வேரூன்றியுள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க முடியுமாயின், அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து(வசதி) மிகும்.

66

அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற் றாசிரியன், தனது படிப்பை, இதுவரை சிறந்ததென்று மிக நீடப் பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியினின்று தொடங் காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்று வெளிகளினின்று தொடங்குதல் வேண்டும்." இங்ஙனம் சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதி அரை நூற்றாண்டிற்கு மேலாகியும், வின்செந்து சிமிது இதை வலியுறுத்தி அரை நூற்றாண்டடுத்தும், (P.T.) சீநிவாசையங் காரும், இராமச் சந்திர தீட்சிதரும் ஏற்கெனவே இம் முறையைக் கடைப்பிடித்துச் சிறந்த வகையில் தமிழர் வரலாறும் தென்னாட்டு வரலாறும் எழுதியும் இன்று சில தமிழ்ப் பகைவரும் கோணை யாராய்ச்சியரும் பழைய வழூஉ முறையில் ஆரிய வேதத்தை அடிப்படையாக வைத்து, தமிழக வரலாற்றை வடக்கினின்று 3. 'தமிழியத் தொன்மையாராய்ச்சி' (Tamilian Antiquary) 2ஆம் இதழ் (1908) 4ஆம் பக்கத்தில் மேற்கோளாகக் காட்டப்பெற்ற P.சுந்தரம்பிள்ளை (எம்.ஏ.) அவர்களின் கூற்று.