பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

37

கருநடம்(கன்னடம்), குடகு முதலியவை நாடுபற்றியும்; மலை யாளம், ஆங்கிலம் முதலியவை மக்கள் பற்றியும்; பிராகிருதம், சமற்கிருதம் முதலியவை தன்மை பற்றியும் பெயர்பெற்றுள்ளன. வடமொழி, தென்மொழி எனத் திசை பற்றியும்; உருது(பாளையம்) என இடம் பற்றியும், பெயர் பெறுவது நாட்டினாற் பெயர்பெறுவது போன்றதே. வழக்கற்ற மொழியாயின், வேதமொழி என்பதுபோல் நூலாலும் பெயர் பெறும். தேவமொழி என்பது ஏமாற்றுப் பற்றியதாம்.

"வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறும் நல்லுலகத்து

99

என்று தொல்காப்பியம் கூறுவதினின்று, கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது தெரிகின்றது. கடைக்கழகக் காலத்தி லும் இந்நிலைமையே யிருந்தமை, கழகச் செய்யுள்களாலும் கழக மருவிய வனப்புகளாலும் அறியப்படும். திராவிடம் (தமிழ்), ஆந்திரம், கன்னடம், மகாராட்டி, கூர்ச்சரம் என்னும் ஐந்தையும் பஞ்ச திராவிடம் என்று பண்டைக்காலத்தில் வடவர் வழங்கிய தால் ஆரியர் வந்த பின்பும் விந்தியமலைவரையும் தமிழும் அதன் திரிபான திரவிடமுமே வழங்கியமை பெறப்படும். அவர் வருகைக் காலத் திலோ, வடஇந்தியாவிலும் திரவிடம் வழங்கியதை, பிராகுவீயும், இராசமகாலும் இன்றும் காட்டும்.

ஒரு நாட்டில் ஒரே மொழி வழங்குமாயின், அதற்குச் சிறப்புப் பெயர் தோன்றாது.பேச்சு அல்லது மொழி என்னும் பொதுப்பெயரே அதற்கு வழங்கும். ஓர் ஊரில் ஒரே ஓர் ஆறிருப்பின், அதை ஆறென்று பொதுப்பெயராலேயே குறிப்பர். இங்ஙனமே மலை, குளம், மரம் முதலிய பிறவும் ஒன்றேயொன்றா யிருப்பின் பொதுப்பெயராலேயே குறிக்கப் பெறும். ஒரு மொழி ஆயிரங்கல் தொலைவிற்கு அப்பாற் படரின், பல்வேறு கரணியம்பற்றித் திரிதல் இயல்பு. அத் திரிபு திடுதிப்பென்று தோன்றாது மெல்ல மெல்லப் படிப்படியாகத் தோன்றும். அது மொழி பெயர்தல் எனப்படும். தொன்று தொட்டுத் தமிழையடுத்து வடபால் வழங்கும் திரவிட மொழி தெலுங்கே. அதனால், அதைத் தமிழர் வடகு என்றனர். அது பின்பு உயிரிசைவு மாற்றத்தால்(Harmonic Sequence of Vowels) வடுகு எனத் திரிந்தது. நீலமலையில் வாழும் ஒருசார் கன்னடத் திரவிடரைக் குறிக்கும் படகர் என்னும் பெயர், வடகர் என்பதன் திரிபே. தெலுங்கை யடுத்துத் திரிந்த பெருந் திரவிடமொழி கன்னடமே.