பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

மூசு மூசென்று இளைக்கிறான் என்னும் வழக்கை நோக்குக. முசு-மூச்சு. ஒ.நோ: பேசு-பேச்சு.

55

மூசு-மூஞ்சு-மூஞ்சி=குரங்கு நாய் முதலியவற்றிற்குப் போல் மூக்கொடு முன் நீண்ட முகப்பகுதி (muzzle).

மூஞ்சு-மூஞ்சுறு-மூஞ்சூறு = எதையும் மோந்து பார்க்கும் வீட்டெலிவகை. மூஞ்செலி என்பது நெல்லை வழக்கு.

(4) குறிப்பொலிகள் (Symbolic Sounds)

வழக்கப்படி சில கருத்துகளைப் பிறர்க்குத் தெரியும் வகையில் குறிக்கும் ஒலிகள் குறிப்பொலிகளாம்.

எழுதமுடிவனவும் எழுதமுடியாதனவுமாக, குறிப்பொலி கள் இருவகைய. ஊம்(ஊங்கொட்டுதல்), சீ, பூ என்பன போன்றவை எழுதமுடிவன. மொச்சட்டமும் (மொச்சக் கொட்டுதல் - smacking), முற்கும் (clucking), வீளையும் (சீழ்க்கை- whistling) போன்றவை எழுத முடியாதன.

தோ தோ (துவா துவா) என்று நாயையும், பேபே (போ போ) என்று கோழியையும், வேசு வேசு என்று பூனையையும், பாய் பாய் என்று ஆட்டையும் விளிக்கும் ஒலிகள் விளியொலி களாயினும் வழக்கம்பற்றிக் குறிப்பால் உணரப்படுவதாற் குறிப்பொலிகளாம். (5) வாய்ச்செய்கை யொலிகள் (Gesticulatory Sounds)

மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற்கேற்ற வாய்வடிவை அமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அச் சொற்கட்கு மூலமான சொற் களைப் பிறப்பித் திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ் வொலிகள் வாய்ச் செய்கை யொலிகளாம்.

எ-டு: ஆ-அ-அங்கா. அங்காத்தல்

வாய்திறத்தல்.

அவ்-கவ்-வவ். அவ்-அவ்வு-கவ்வு-வவ்வு.

ஒன்றைக் கவ்வுதலையொத்த வாய்ச்சைகை நிலை, அவ் என்னும் ஒலியைத் தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப் பல் கீழுதட்டெ ஈடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். இந் நிலை வகரமெய் யொலிப்பிற்கே ஏற்கும்.

பிற்காலத்தில் அவ்வுதல் என்னும் சொல் மனத்தினாற் பற்று தலுக்கும், கவ்வுதல் என்னும் சொல் வாயினாற் பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னும் சொல் கையினாற் பற்றுதலுக்கும் வரையறுக்கப்