பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

57

ஆ ங்கிலத்தில் மம்மா பப்பா என்று திரிந்துள்ளன வென்று கொள்வதே பொருத்தமாம். அகரமுதல் பகரமுதலாகத் தமிழிலும் திரவிடத்திலும் கூடத் திரிதலுண்டு.

எ-டு :

டு

அஞ்சவன்-பஞ்சவன் = ஐஞ்சிற்றரசரைக் கொண்டு

ஆண்ட பாண்டியன்,

அப்பளம்-பப்படம் (ம)

தமிழ மாந்தர் குறிஞ்சி நாகரிக நிலையிலேயே மாட்டைப் பாலிற்காக வளர்க்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவதால், தாயை விட்டு நீங்கிய கன்றுக்குட்டியின் கதறலினின்று, அம்மா என்னுஞ் சொல்லைத் தமிழர் அன்னையைக் குறிக்க அமைத்துக்கொண்டனர் என்று கொள்வது மிகப் பொருத்த மாம். பின்பு, அது அப்பா என்று வலித்துத் தந்தையைக் குறித்திருக்கின்றது. மெல்லின மெய்ச்சொல் மென்மை மிக்க தாயையும், வல்லின மெய்ச்சொல் வன்மை மிக்க தந்தையையும், குறிப்பது இயற்கையே.

(7) சுட்டொலிகள் (Deictic Sounds)

சுட்டிக்காட்டும் ஒலிகள் சுட்டொலிகள்.

சேய்மையைச் சுட்டுதற்கேற்ப வாயை விரிவாய்த் திறந் தொலிக்கும் ஆகாரமும், சேய்மைக்குப் பிற்பட்ட அண்மையைச் சுட்டுதற்கேற்ப வாயைப் பின்னுக்கிழுத் தொலிக்கும் ஈகாரமும், சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்ட முன்மையைச் சுட்டுதற் கேற்ப இதழ்களை முற்படக் குவித்தொலிக்கும் ஊகாரமும், முறையே சேய்மையண்மை முன்மைச் சுட்டொலிகளாயின. இவையே முதன் முதல் தமிழில் தோன்றிய உயிர்கள். இவை உண்மை யில் வாய்ச்சைகை யொலிகளாகும். ஆயினும், சிறப்பு நோக்கி வேறு பிரிக்கப்பெற்றன.

முதற்கண் மூவிடச்சுட்டு கைச்சைகையினால் மட்டும் நிகழ்ந்தது. பின்பு, கைச்சைகையோடு கூடிய வாய்ச்சைகையி னால் நிகழ்ந்தது, அதன்பின், வாய்ச்சைகையினால் மட்டும் நிகழ்ந்து வருகின்றது. ஆயின், அவ் வாய்ச்சைகைத் தன்மை இன்று மறைந் துள்ளது, முச்சுட்டொலிகளும் வாய்ச்சைகை யொலிகளாயிருப்ப தனாலேயே, அவை தமிழில் எக் கரணியத்தையிட்டும் பிறமொழி களிற்போல் இடமாறிச் சுட்டுவதில்லை. இதனால், தமிழொடு சிறிதும் பெரிதும் தொடர் புள்ள பிற மொழிச் சுட்டுச் சொற்கட் கெல்லாம், தமிழ்ச் சொற்களே மூலமென்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்ளலாம்.