பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தமிழ் வரலாறு

எ-டு:

ம் மாறாதன:

சமற்கிருதம்

தமிழ்

தத்ர

அங்கு

ஆங்கிலம் that

இங்கு

this

இடம் மாறியன: அத்ர

அதுனா

||

இங்க

ப்பொழுது

it

thus

|| ||

|| ||

2. தமிழ்த் தோற்றம் (செயற்கை மொழி) (தோரா. கி.மு.50,000)

தமிழ் அது

து

அது

இப்படி

மூவகைச் சுட்டொலிகளினின்றுஞ்சொற்கள் தோன்றியதே தமிழ்த் தோற்றமாம். இது செயற்கை மொழி (Artificial Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) எனப்படும்.

முந்தியல் மாந்தர்மொழி யெல்லாம் இசைப்பாட்டாகவே தோன்றின என்பது எசுப்பெர்சன் கருத்து. அது தவறாம். உணர்ச்சி விஞ்சிய காதல், இன்பம், வெற்றி, மகிழ்ச்சி, துன்பம் முதலிய மன நிலைகளிலேயே முந்தியல் மாந்தர்-அவருள்ளும் இசைவுணர்ச்சியும், மொழியாற்றலும் மிக்கவரே-இசைமொழி வாயிலாய்த் தம் கருத்தை வெளியிட்டனர். இக்காலத்தும், இன்ப துன்பவுணர்ச்சி விஞ்சிய போது, தத்தம் அறிவுநிலைக் கேற்ப இசைப்பாட்டாகவும் செய்யுளாகவும் தம் கருத்தைச் சிலர் வெளியிடுதல் காண்க. மேலும், பொருளும் ஒழுங்கு மற்ற ஒருசில இசையொலித் தொகுதி களினின்று வெவ்வேறு பொருளும் இலக்கண வொழுங்குமுள்ள பயர் வினையிடைச் சொற்களும், மூவிடப் பெயர்களும் அவற்றின் திரிபான இருதிணை ஐம்பால் மூவிட ஈறுகளும், வேற்றுமை உருபுகளும் கால விடைநிலைகளும், பிறவும், அமைந்தன வென்றல், உத்திக்குப் பொருந்தாத கூற்றாம்.

உரை, செய்யுள் (அல்லது பாட்டு) என்னும் இருவகை மொழி நடையுள், முதலில் தோன்றியது முன்னதே. அதுவும் தனித்தனி சொல்லாகவே தோன்றிற்று. ஆகவே, சொல்லே மொழியலகாம் (Unit of speech). உள்ளத்தில் தோன்றும் கருத்து, அதைத் தெரிவிக்கும் சொற்றொடர்க்கு முற்றும் ஒத்ததன்று. அமைய வேறுபாட்டிற் கேற்ப, ஒரு சொல்லே பல சொற்றொடர்க்குரிய பல கருத்தைத் தெரிவிக்கலாம். ஒரு குழந்தை அல்லது நோயாளி ‘தண்ணீர்’ என்றால், அது,