பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

(1) எனக்குத் தண்ணீர்வேண்டும்; (2) அதோ பார்! தண்ணீர்;

(3)

வெள்ளம் வீட்டிற்குள் வந்துவிட்டது; (4) தண்ணீர் கொண்டுவா;

(5)

(6)

(7)

இந்தப் பால் தண்ணீர் கலந்தது; இச் சொல் 'தண்ணீர்';

இதன் பொருள் தண்ணீர்;

(8) இவ் விடுகதை விடை தண்ணீர்; (9) இப் படத்திலுள்ளது தண்ணீர்;

59

(10) (Cold) water என்னும் ஆங்கிலச் சொற்கு நேர் தென் சொல் 'தண்ணீர்’ என்று பல கருத்தைத் தெரிவிப்பதுடன், “நீ குடிப்பது என்ன?' என்பதுபோன்ற வினாவிற்கு விடையாகவுமிருத்தல் காண்க. நன்றாய்ப் பேசத் தெரியாத குழந்தையும், பேச்சு வலிமையற்ற நோயாளியும், தாய்மொழியொன்றே தெரிந்த அயல் நாட்டானும், பெரும்பாலும் தனிச் சொற்களாலேயே தம் கருத்தைத் தெரிவித்தல் காண்க. இந் நிலையிலேயே மொழி வளர்ச்சியுறாத முந்தியல் மாந்தனும் இருந்தான்.

மொழி எளிய நிலையில் தோன்றிப் படிப்படியாக வளர்ந்த மாந்தன் அமைப்பேயன்றி, அமைப்பேயன்றி, இறைவனாற் படைக்கப்பெற்று இயற்கையாக அறியப்பட்டதன்று. மொழி இயற்கையானதாயின் எல்லா மக்களும் கல்லாமலே ஒரே மொழி பேசுதல்வேண்டும். அங்ஙனமில்லை. மக்கட் கூட்டங்களின் நாகரிக நிலைக்குத் தக்கவாறு, மொழிகள் வெவ்வேறு வகைப்பட்டும் நிலைப்பட்டும் அமைப்புக் கொண்டும் உள்ளன. சில அநாகரிக மாந்தர் மொழிகள் பறவை விலங்கொலிகளினும் சற்றே உயர்ந்தவையாகும். எத்துணை உயர்தனிச் செம்மொழியாயினும், தலைசிறந்த அறிவியல் வளர்ச்சி பெற்ற மக்களாயினும், ஒவ்வொரு சொல்லாய் மெல்ல மெல்லக் கற்றாலன்றி ஒருவரும் தம் தாய்மொழியைப் பேசவியலாது.

மொழித்துணையின்றியும் மாந்தர்க்குக் கருத்து நிகழும். ஊமையர் நிலை இதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாம். அஃறிணையுயிரிகளின் வாழ்க்கையும் இதற்கு ஒருவகைச் சான் றாகும். மொழியின்றிக் கருத்து நிகழாதென்பது, ஆராய்ச்சியில் லார் கூற்றே. வினைக்குத் துணைக்கொள்வது போன்றதே. உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, சூழ்வு, தீர்மானம், இன்பம் (உவகை), துன்பம் (அழுகை) முதலிய எண் அல்லது தொண் (ஒன்பான்) சுவைநிலை, ஐயம் (சந்தேகம்), தெளிவு ஆகியவையே மனத்தொழில்கள். இவற்றிற்கு மொழித்துணை தேவையில்லை. காட்சிப்பொருள்க ளெல்லாம் மனத்திலும் தோன்றுமாதலால், நினைப்பும்

ருவலிப்பாகவே(imagination) நிகழும்.

சூழ்வும்