பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாவாணர் நோக்கில் பெருமக்கள் அக் கேள்விக்கு விடை தரவல்லதோ என்பது எமக்குள் நெடுநாள் நிகழ்ந்து வரும் ஆராய்ச்சியாகும். அஃதாவது-இச் சூத்திரத்திற் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு வரும் என உயிர்பின் வழி வரும் ஒருவினையொடுச் சொல்லைக் கடவுள் வாழ்த்துக்குக் கூறுதலால், அவ் வாழ்த்து முதலிற் கூறுஞ் சிறப்புடையதென்பதும் மற்றவை அதன் பின்னர் வைத்து வாழ்த்தப்படுதற்கு உரியவென்பதும் அறியத்தக்கன. இனிக் கொடிநிலை' என்பது மேகத்தை யுணர்த்தும்; கீழ்த்திசைக் கண்ணே நிலைபெறுதலுடையது, நீடனிலையுடையது என்பன இதன் பொருளாம் (கொடி கீழ்த்திசை).

நச்சினார்க்கினியரும் இவ் விரு பொருள்களையே பற்றிச் சூரியனுக்கு இப் பதத்தை இணக்குதல் காண்க. மேகவாகனனாகிய இந்திரனது திசை கிழக்காதலின் அத் திசையே மேகத்துக்கும் உரியதென்ப தும், அங்கு நின்றெழுந்த கொண்டல்களே உலகதாபந் தீரப் பெய்வன என்பதும் அறியத் தக்கவை. குணக்கினின்று எழுவது பற்றியே மேகம் கொண்டலெனப் பெயர் பெற்றதென்க.

ce

ஞாலம் வறந்தீரப் பெய்யக் குணக் கோடி காலத்திற்றோன்றிய கொண்மூப்போல்”

(கலித்.82)

என்பதனால் கிழக்கிலெழும் கொண்டல்களே பெயலிற் சிறந்ததாதல் அறியப்படும். இவ்வாறன்றி மின்னற்கொடிக்கு நிலைக்களமாதல்பற்றி மேகம் 'கொடி நிலை' எனப்பட்டதெனினும் அமையும். இவற்றால் கொடிநிலை என்பது மேகத்தைக் குறிக்கும் ஆற்றல் பெரிதுடையதாதல் தெளியலாம்.

இரண்டாவது கந்தழி என்பது-கந்து-பற்று, அழி-அழிவு; அஃதாவது பற்றழிந்தார் அல்லது நீத்தார் தன்மை என்றபடியாம்.

மூன்றாவதான வள்ளி என்பது அறத்தைக் குறிக்கும். என்னை? அவ்வறம் சிறப்பாக வண்மை பற்றியே நிகழ்வதாகலான். ‘ஈதலறம்' என்றார் ஒளவையாரும். நச்சினார்க்கினியர் தங்கொள்கைக் கியையச் சந்திரனுக்கு இப் பதத்தை இணக்குமிடத்து, "வெண்கதிர் தேவர்க்கு அமிர்தம் வழங்க லான் வள்ளி யென்பதூஉமாம்” என்று கூறுதலினின்று வண்மையடியாகவே வள்ளி என்ற சொல் வழங்கியமை தெளியப்படும். படவே வண்மையாகிய அறத்துக்குரிய கடவுள் வள்ளி எனப்பட்ட தென்க; இங்ஙனம் மேகம், நீத்தார், அறக்கடவுள் என்ற மூன்றும், கடவுளை முதலாகக் கொண்டு வாழ்த்தப் படுதலும் இப் பாடாண் பகுதியாம் என்பது, சூத்திரப் பொருளாதல் கண்டுகொள்க.”

இனி, இதற்கு நம் நாவலர் கண்ட புத்துரை வருமாறு:

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற கொடிநிலை காந்தள் வள்ளி என்னும் பெயருடைய; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - போர்த்