பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

4

பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன்

பாவலர் பாரதிதாசன் அவர்கள், பெரும்பாலும் ஆசிரியப் பாவிலும், ஆசிரிய மண்டிலத் (விருத்தத்)திலும், இக்காலத்திற்கும், இந்நாட்டிற்கும் ஏற்றவாறு பொதுமக்கட்கு விளங்கும் எளிய இனிய இலக்கண நடையில், சீர்திருத்தக் கொள்கைகளையும், முன்னேற்ற வழிகளையும், உணர்ச்சிக் கருத்துகளையும், எழுச்சிச் செய்திகளையும், அறிவுக் கதிர்களையும், அழகிய சிறு நூல்களாகவும், தீஞ்சுவைப் பாட்டுகளாகவும், இடைவிடாது எழுதி வெளியிட்டுவரும் நாட்டுத் தொண்டு ஒப்பற்றதாகப் போற்றத் தக்கதாம்.

பண்டைக் காலத்தில் அறிஞர் சிலர் தத்தம் ஊருக்கு மட்டுமன்றித் தமிழ்நாடு முழுமைக்குமே ஆசிரியராக, நூலாலும்-உரையாலும் அறி வுறுத்தினர். இவருள், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும், மதுரை ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியரும் சிறந்தவராவர். இவர் போன்றே நம் பாவலரும், புதுச்சேரிக்கு மட்டுமன்று, தமிழ்நாடு முழுமைக் குமே ஆசிரியராவர்.

இவ் வாசிரியர் இருபாலர்க்கும் தந்த எதிர்பாராத முத்தத்தின் பின், விலை யேறப்பெற்ற பல முத்தங்கள் (முத்துகள்) இவர் வாயினின்று ஒவ்வொன்றாய் வந்துகொண்டே யிருக்கின்றன. இவற்றுள், இருண்ட வீடு, குடும்ப விளக்கு என்னும் ஈர் உரையாணிகளும் ஒவ்வொரு வீட்டிலும், அழகின் சிரிப்பு ஒவ்வொரு மாணவனிடத்தும் இருக்கத்தக்கன. இவற்றுள் முன்னவை நல்வாழ்க்கைக்கும், பின்னது இயற்கை வள்ளலிடம் புலமையும், பாவன்மையும் பெறுவதற்கும் ஆற்றுப்படுப்பன. ‘அழகின் சிரிப்பு' என் னும் பெயரே பல சிறந்த கருத்துகளை உள்ளடக்கிய ஒரு சிறு செய்யுளாகும். 'இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்"

66

(குறள். 1040)

என்னும் குறளுக்குக் கல்விச் செல்வத்திற்கும் ஏற்ற உரையைக் கொள்வதற்குத் தூண்டுவது அழகின் சிரிப்பாகும்.

இங்ஙனம், பண்டு செய்யுள் மொழியாயிருந்து, இன்று உரைநடை மொழியாயிருக்கும் தமிழை, முன்பு முத்தமிழாயிருந்து இன்று இயற்றமிழ் அளவாயிருக்கும் தமிழை, ஒருகால் திருந்திய

கருத்துகளையே