பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்

19

மறைமலையடிகள், திரு.வி.க., பெரியார், கோ.து. நாயுடு (G.D. நாயுடு) முதலியோர் இல்லாத காலத்து, அடிகள் நெடுவாழ்வும் தொண்டும் தமிழகத்திற்கு இன்றியமையாதனவாகும். எல்லாம் வல்ல இறைவன், இதன் மேலும் ஒரு நூற்றாண்டு அடிகளை வாழவைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மீது தண்ணருள் பொழிக.

தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாட்டுச் சிவனியக் கோயில்களை யெல்லாம் ஆண்டு நடாத்துமாறு கந்தர்புரித் தலைமை மேற்காணியார் (Arch Bishop of Canterbury) போன்ற ஒரு தலைமைப் பதவியில் அமர்த்துக. குணமேறு குன்றக் குடியடிகள் எக்கர்

மணன்மீறு பன்னெடுநாள் வாழி - கணமேறு தெய்விகப் பேரவை தீந்தமிழாற் பேரின்ப

உய்விகத் துண்மை யுரைத்து.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது 50ஆம் ஆண்டு விழா மலர் (நாண்மங்கலத் திருவிழா மலர்) 1974