பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

7

தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு

கே.கே. சா அவர்கட்குப் பாராட்டு

21-9-1975 அன்று, சென்னையில் நிகழ்ந்த, தமிழ் சமற்கிருத ஏனை யிந்திய மொழிகள் ஆராய்ச்சிக் களரிக் கருத்தரங்குக் கட்டுரைகளைப் படித்தேன்.

எத்துறையிலேனும், சிறப்பாகத் தமிழ்த்துறையில், ஆராய்ச்சி செய் வதற்கு, மதிநுட்பம், பரந்த கல்வி, நடுநிலை, அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா என்ற ஆறு திறங்களும் இன்றியமையாது வேண்டும். கருத் தரங்கிற் கட்டுரை படித்தவருள், அல்லது உரை நிகழ்த்திய வருள் தமிழ்நாடு ஆளுநரும், ஓய்வுபெற்ற சென்னை உயரற மன்றத் தலைமை நடுவாளர் உயர்திரு. பி.வி. ராஜமன்னாருமே, இவ் வறு திறங்களையும் உடையவராகத் தெரிகின்றது.

தமிழ் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி என்பது, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. (Beatertrack).

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”

என்பது பேரறிஞர் ஒருவர் பாடிய பழந் தனிப்பா.

கால்டுவெலார் கிறித்தவ சமயக் குரவராதலால், ஏதேன் தோட்டக் கதையை எழுத்துப்படி நம்பியவர். அதனால், தமிழரின் முன்னோர் வடமேலை நாட்டினின்று வந்தவர் என்னும் கொள்கையர். அவர் காலத்தில், தொல்காப்பியமும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் என்னும் கடைக் கழகப் பாட்டுகளும் பனுவல்களும், சிலப்பதிகாரம் போன்ற கழகமருவிய வனப்புகளும், தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தன. அவர்க்கு வழிகாட்ட மறைமலையடிகள் போலும் தமிழ்ப் புலவரும் ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும், அவர் நடுநிலையாகத் தமிழை ஆழ்ந்து ஆராய்ந்ததனால், அம் மொழி ஆரியத்திற்கு (சமற் கிருதத்திற்கு) முந்திய தென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கிய