பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

குளறு சுளி

துளாய்

பவளம்

குழறு = நாத்தடுமாறு

சுழி = முகங்கோணு, கோபி துழாய் = துளசி

பவழம்

13

திரிசொற்களிலும் (Derivatives) தொடர்களிலும் வரும் ளகர ழகரங்களை, அச் சொற்றொடர்களின் பகுதிகளையேனும் நிலைமொழி வருமொழிகளை யேனும் நோக்கிப் பெரும்பாலுந் துணிதல் கூடும்.

உ-ம்:

பழக்கு என்பது பழகு என்பதன் பிறவினை.

தாழங்குடை = தாழை + குடை

ளகர ழகரந் துணியப்படாத பிறசொற்களை ஆசிரியர்வாய்க் கேட்டுணர்க.

மொழி முதலெழுத்துகள்

-

Initial Letters

மெய்யெழுத்துகளும், ஆய்தமும், ண, ர, ல, ழ, ள, ற,ன என்னும் ஏழெழுத்துகளின் உயிர்மெய்களும் தமிழில் மொழிமுதல் வரா. மெய்யெழுத்து வரி முதலிலும் வராது.

டகரம் ‘டம்’, ‘டப்' போன்ற ஒலிக்குறிப்புகளிலும், அவற்றினடியாகப் பிறந்த டங்கா, டமாரம், டம்பம், டப்பி முதலிய சொற்களிலும் வசனத்தில் வரலாம். முன்னோர் டகர முதலைத் தகர முதலாக எழுதினர்.

உ-ம்:

டமருகம் (வ.) - தமருகம், டொப்பி (ஹி) - தொப்பி

நிலைமொழி யீற்றிலுள்ள யகரமெய்யோடாவது, இ, ஈ, ஐ என்ற உயிர்களோடாவது இகரம் புணர்ந்து,'யி' தமிழில் மொழிமுதல் வரலாம்; ஆனால் தனித்து மொழிமுதல் வரவே வராது.

உ-ம்:

+

போய் + இருக்கிறான் = போயிருக்கிறான்

துடி + இடை = துடியிடை

பிழை

யிருக்கிறான்

திருத்தம்

இருக்கிறான்.

நிலைமொழி ஈற்றிலுள்ள இ, ஈ, ஐ ஒழிந்த மற்ற ஒன்பதுயிர்களுடன் உகரம் புணர்ந்து,'வு' மொழி முதல் வரலாம்; ஆனால்,தனித்து மொழிமுதல் வராது.

உ-ம்:

பிழை

பல + உள = பலவுள

வுள, வுண்டு

திருத்தம்

உள, உண்டு

வராது.

மொழியிடை யெழுத்துகள்

Medial Letters

மொழியிடையில் ட், ற் என்ற மெய்களுக்குப்பின் வேறொரு மெய் வரவே