பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

“நம் அகரமுதலி பொதுவகையானதன்று; சொற்பிறப் பியற் கூற்றைச் சிறப்பாகக் கொண்டது

913

இப்பணியை (அகரமுதலிப் பணியை) மேற்கொள்ளின்;

(1) தலைசிறந்த தமிழ்த்தொண்டாற்ற நல்வாய்ப்பு

(உ) சொல்லாராய்ச்சியில் முழு நிறைவான தேர்ச்சி

(5) உலகறிபெயர் (ஏற்படும்)

14

(கழகத் தமிழ்க்) கையகராதியில் புதுச்சொற்கள் சேர்க்கப் படுவதுடன் பழஞ்சொற்பொருள் திருத்தப்படவும் வேண்டும்.

(எ-டு) அகணி - பனைமட்டையின் உள்நார் என்றுள்ளது. அகணி புறநாரே அன்றி அகநாரன்று. இங்ஙனம் பலவுள்5

15

பாவாணர் படைத்துள்ள நூல்களிலுள்ள சொல்லாய்வு பொருளாய்வு - வேர்-ஒப்பீடு என்பவற்றையெல்லாம் அடைவு செய்து அகரப்படுத்தின அஃதொன்றே அரும்பெரும் புதைய லாய் ஆய்வாளர்க்கு உதவும். அது நிகழ்தற்குத் தலைப்படுவார் உணர்வு பாராட்டுக்குரியது.

13.26-9-75 (இ.கு.) 14. 3-7-74 (இ.கு.)

15. 13-7-46 (இ.கு.)