பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையில் தோக்கசு (Stokes) என்ற மேனாட்டுக் கிறித்தவக் குரவர் தொண்டாற்றியிருக்கிறார். அவர் வளமனைக்காவற்காரராக இருந்தார் முத்துசாமித்தேவர். அவர் மனைவியார் வள்ளியம்மாள். அவ்விருவரையும் கிறித்தவ ராக்கியிருக்கின்றார் க்கின்றார் அத்துரைமகனார். அவ்விருவருக்கும் பிறந்தவர்தான் என் தந்தையார். என் தந்தையார் பிறந்த சின்னா ளில் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டமையால் அத்துரையே எடுத்து வளர்த்து ஞானமுத்து தோக்கசு (Stokes) எனப் பெயரிட் டுச் சொக்கம்மா என்ற பெண்ணை மரியாள் எனப் பெயர்மாற்றி உரிய பருவத்தில் மணமும் செய்து வைத்திருக்கிறார். அவ்வம்மை யார் கூடிவாழாது ஈழத்திற்கு ஓடி விட்டப்பின் உண்மைக் கிறித்தவரானதினால் கோவில்பட்டிப் பாண்டவர் மங்கலத்தில் ஓதுவாராக (உபதேசியாராக) இருந்த குருபாதம் என்பவரின் மகளாகிய என் அன்னையரைப் படிப்புப் பற்றியும் குல வேற்றுமை காட்டாமைப் பொருட்டும் மணந்துகொண்டார். 7 ஆம் எட்வர்து இளவரசராயிருந்த காலத்தில் என் அன்னையார் சேராடக்கர் கல்லூரியில் 3ஆம் படித்தரம் (III grade) தேறியவர்.

(கடிதத்தின் இரண்டாம் பக்கம்)

என் தந்தையார் சங்கரன் கோவிலிற் கணக்காயர் வேலை பார்த்தார். அங்குத்தான் நான் பிறந்ததாகச் சொல்லப்படு கின்றது.என் தந்தையார்க்குச் சொந்தமான இராசநாயகத் தேவர் பனவடலியில் இருந்து அடிக்கடி வந்து போவார். எங்கள் வீட்டில் தங்கி விருந்துன்பார். உள்ளூரிலும் 3 கல் தொலைவி லுள்ள களப்பாளங் குளத்திலுமிருந்து மறவர் குலச்சிறாரும் இளைஞரும் என் தந்தையாரிடம் பயின்றனர். என் தந்தையார் கணக்காயராயிருந்த பள்ளி தாழ்த்தப்பட்ட மக்கட்கென்று ஏற்பட்டதுதான்.

சங்கரன்கோவிலில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என் அன்னையார்வழியை நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என் உறவினன் அல்லாத நெடுஞ்செழியன் என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என் தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னைத் தன் இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லியிருக்கிறான. அதை நம்பி என்னையுங் கேளாது திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதியிருக்கிறது. நான் புத்தகத்தைப் பாராததனால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு எழுதி னாலும் தாங்கள் அதை எங்ஙனம் வெளியிடலாம்? நான்