பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பின்னே. அடிகளார் வரலாறு ‘கழகநூல் அன்று' என்றும். அதனை வெளியிட்டவர் மறை திருநாவுக்கரசே என்றும். அறிந்துகொண்ட பாவாணர், பொறுத்துக் கொள்ளுமாறு கழக ஆட்சியாளர்க்கு 7-12-60இல் கடிதம் எழுதுகின்றார்:

66

மறைமலையடிகள் வரலாற்றைத் தாங்களே வெளி யிட்டதாக என் மாணவர் அருணாசலம் தவறாய்ச் சொன்னதை நம்பிச் சினந்தெழுதிவிட்டேன்.. அன்புகூர்ந்து பொறுத்துக் கொள்க. என் ஆராய்ச்சி நூல்கள் ஐம்பதும் வெளிவந்த பின்னரே என வரலாற்றை விரிவாய் வரைவேன். அன்புகூர்ந்து திருநாவுக் கரசின் முகவரியை உடனே தெரிவிக்க’ என்பது அக்கடிதச் செய்தி.

அடிகளார் வரலாறு 1959இல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு வந்திலது. வந்த பதிப்பிலும் வந்தநிலை மாறிற் றில்லை. ஆய்தக் கட்டுரையோ கழகத்தின் ஆயிரத்தெட்டாவது நூல் வெளியீட்டு விழா மலருக்கு எழுதப்பட்டது. மலர் வெளியிடப் பட்டது 21-8-1961இல் ஆகும். அதில் கட்டுரைப் பகுதியில் 53 ஆம் பக்கத்தில் ஆய்தம் இடம் பெற்றுள்ளது.. அதிலுள்ள ஆசிரியர் குறிப்பு:

தேவநேயப்பாவாணரவர்கள் 7-2-1902இல் சங்கரநயினார் கோவிலிற் பிறந்தார். வடஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்பூரில் நடுநிலைப்பள்ளியொன்றில் கல்வி கற்கத் தொடங்கிப பாளையங்கோட்டையில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்துப் பின்னர் தமிழணங்கை வணங்கித் தாமே இலக்கண இலக்கியங் கள் பயின்று 24ஆம் அகவையில் தமிழ்ச் சங்கப்பண்டிதர் தேர்வில் தேறி, தமிழாசிரியர் பணிமேற்கொண்டு 23 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியிலும் 12 ஆண்டுகள் கல்லூரியிலும் பணி யாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றுப் பேராசிரியராகத் திகழும் இவர். தற்போது அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறையில் வாசகராக (Reader)ப் பணியாற்றி வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக மொழியாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இவர். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் வழூஉக் களைக் களைந்து வருவதோடு, தனித்தமிழுக்கு அளித்துவரும் ஆக்கமும் அளப்பரிது” என்பதாம்.

ம்

இதில் பாவாணர் குறிப்பிட்ட குறிப்புகள் இடம் பெற வில்லை. ஏனெனில், அதன் அச்சுப்பணி அதன் முன்னரே