பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன் விடுதலைப் போராடி :

145

தமிழ்நாட்டின் உண்மையான விடுதலைப் போராடிகள் யார்? என்றொரு கட்டுரை குறள் நெறிக்கு விடுத்திருக்கின்றேன். 70 மலையாளப் பழமொழி:

(அருணாசலத்திடம்) மலையாளப் பழமொழிகள் எழுதிய இரு பொத்தகங்களை வாங்கி வைக்க71

நகையாட்டு :

அருணாசலம் எனக்கு ஒன்றும் தெரியாதென்றும் அவன் எனக்குக் கற்பித்து எம்.ஏ., பி.ஓ.எல். பட்டங்கள் வாங்கிக் காடுத்ததாகவும் அவன் பொத்தகங்களிற் சிலவற்றை நான் திருடியதாகவும் அச்சகத்திற் சொல்லியிருக்கிறான். எத்தனை நகைச்சுவையும் வேடிக்கையுமான செய்தி. எழுத்து வரலாறு:

72

து

இற்றை யெழுத்துகளுள் 'ழ ள றன’ தவிர ளற தவிர ஏனைய வெல்லாம் தலைக்கழக காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலம்வரை எகர ஒகர உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகர குற்றியலுகரங்களும் மகரம் புள்ளி யுடன் வழங்கப்பெற்றன. கடைக் கழகக் காலத்தில் அல்லது சற்றுப்பின் அவை நீக்கப் பெற்றன. ஈகாரத்தின் பண்டை வடிவம் ' (கரத்தின் மேல் கோட்டில் ஒரு சுழியிடல்), இவை என் தமிழ் வரலாற்றில் ஓரளவு விளக்கப்பெற்றுள்ளன.

திரு.தி.நா. சுப்பிரமணியன் எழுதிய பண்டைத்தமிழெழுத் துக்கள் பிராமி வரிவடிவின் வரலாற்றையே விளக்குவது.

ஹீராசு பாதிரியார் மோகெஞ்சோதரோ எழுத்துக்களே தமிழெழுத்துக்களின் மூலம் என்பர். அவரெழுதிய ஆங்கில நூல் பெரிய நூல் நிலையங்களில் இருக்கும். மோகெஞ்சோதரோ எழுத்துக்கள் தலைக்கழக எழுத்துக்களின் முந்தின நிலையாக இருக்கலாம். 73

பண விடையே நன்கொடை :

இங்ஙனம் விற்றுதவுபவர் தமிழ்நாட்டிலேயே வேறெவரு மில்லை. இவ் விற்பனைத் தொகையாலேயே வாழ்க்கை நடந்து

70.26-10-66 (வி.அ.க)

72.11-1-67 (மி.மு.சி)

71. 21-11-66 (மி.மு.சி)

73.28-1-67 (மி.மு.சி)