பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

7

மட்டும் ஆயிரத்தைத் தாண்டும் அளவில் உள. அவையெல்லாம் த்தொகை நூலுக்குப் பெரிதும் பயன் பட்டுள.

மேலும், சேலம், அரிமாப் புலவர் மி.மு. சின்னாண்டார், வங்காலூர் பேரா. கு. பூங்காவனர், திருத்துறைப்பூண்டி ப் பெரும்புலவர் வி. பொ. பழனிவேலனார், ஆற்றூர் பெரும் புலவர் பா. நாராயணர், நெய்வேலி, பாவாணர் தமிழ்க் குடும் பஞ்சார் அன்பர், ஆ. கருப்பையா, பேரா. ந. எழில் மகிழ்நர், மதுரை, தமிழ்ப்பாவை ஆசிரியர் வி.அ. கருணைதாசர், பேரா. மு. தமிழ்க் குடிமகனார், பேரா. வீ.ப.கா. சுந்தரனார், எழுத்தாளர் மன்றத் தலைவர் பு. மனோகரனார், பொறியர் க.சி. அகமுடை நம்பி, ஆகியோர் கடிதங்களும் என்வயமிருந்தனவுமாக 1520 கடிதங்கள் இத்தொகுப்பிற்குப் பயன்பட்டுள்ளன.

என் வேண்டுகோளை ஏற்ற அளவில் தம்மிடம் இருந்த கடிதங்களை மட்டிலும் விடுப்பதுடன் அமையாமல் பாவாணர் கடிதம் இருக்கும் பிறரிடத்தும் தாமே முயன்று விடுத்த பெரு நோக்கப் பேராளர் இருவர். ஒருவர் மீட்போலை ஆசிரியர் பேரா. கு. பூங்காவனர்; மற்றொருவர் நெய்வேலி உ.த.க. அமைப் பாளர் திரு. ஆ. கருப்பையா!

பொதுப்பொருள் என்னும் பொருளும், தம்கைவயம் உள்ளமையால் தம் பொருளே' என்பார், தாமும் பயன் கொள்ளார்; பொதுவுக்கும் பயன் செய்யார்! ஆனால், மேலே சுட்டிக் காட்டிய பெரு மக்கள் கேட்ட அளவில் கடிதங்களை

வழங்கினர்! தடையொன்றும் இன்றி உள்ளம் தளிர்க்க

வாழ்த்துடன் உதவினர்! அதனினும் நினைக்கு நெக்குருகும் வண்ணம் தாமே தேடிவந்து உள்ளார்ந்த அன்பால் உதவினர்! வ்வுதவுதல்களில் அடிக்களம் என்ன? “பாவாணர் பொருள் பைந்தமிழ்ப் பொருளே! அவர் திருப்பெயர் நிலைக்கத் தொடரும் பணிக்கு எம் உதவி முதற்படி உதவியாக இருக்க வேண்டுமேயன்றி, இரண்டாம் இடத்திற்கும் செல்லுதல் கூடாது! ஆக்கப் பணிகள் தேக்கமின்றி நடக்க வேண்டுமானால், ஊக்குவார் பங்கும் அதற்கு உறுதுணை” என்றும் பெருநோக்கப் பெற்றிமையில் அவர்கள் பிறங்கியமையே அடிக்களமாம்!

இனிப், பாவாணர் கடிதங்கள் பற்றியும் சில குறிப்புகளைச் சுட்டுதல் வேண்டும்.

ஆசிரியர் தொல்காப்பியனார் 'மெய்ப்பாடு எட்டு' என்று, தமக்கு முன்னோர் காலத்திலேயே உணர்ந்து எண்ணியவற்றை