பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

169

பாவாணர் நூல் வெளியீட்டுக்கு உதவிய பெருமக்கள் சிலர். அமைப்புகள் வழியாகவும் தம் பொறுப்பாகவும் உதவிய நன்மக்களும் பலர். அவர்கள் உதவியவை உப்புக்கும் காடிக்கும் கூற்றாக வாழ்ந்த ஒருவர்க்கு உரியவை இல்லை என்பதை உணர்ந்தே உதவினர்! தாமே விரும்பியும் தாமே தலைப்பட்டுத் தண்டியும் உதவினர். அவர்கள் உதவுதல் எத்தகு உயர்ந்த அரிய- பயன்மிக்க-நூல்களைப் பெறுவதற்கும், நூல்களை இயற்று தற்கும் ஏந்தாக இருந்தன என்னும் பூரிப்பை இப்பகுதிக் குறிப்புகள் கட்டாயம் உணர்த்தும் . பாவாணர் தொகுத்த நூல்களின் முழுப்பட்டி இச்சுட்டில் இல்லை. ஒரு பகுதியே. முழுவதும் பட்டியிட்டுக் காட்டின் பெரு விரிவுடையதாகிப் போகும். படிக்கும் சுவையைக் குறைக்கவும் கூடும். ஆதலான் வேண்டுமளவால் கொள்ளப்பட்ட குறிப்புகளே இவை.

க்குறிப்புகளால் பாவாணர்க்கு உதவியவரின், ஒவ்வொரு காசும். ஆய்வுக் கருவியாகப் பயன்பட்டுள்ளமையும், அக் கருவியின் விளைவாக ஆய்வு நூல்கள் வெளிப் பட்டுள்ளமையும் அந்நூல்கள் தமிழ் மீட்புப் பணிக்கென்று அமைந்த படைக்கலக் கொட்டில்களாத் திகழ்கின்றமையும் உளங்கூரக் கண்டு கொள்வர். தமக்குத் தாமே பெருமிதம் கொள்ளவும், பாவாணர் படைப்புகளுள் தாமும் ஊடாடி ஒளிந்து கிடப்பதை அறிந்து கொள்ளவும் வாய்க்கும்.

“உதவி வரைத் தன்(று) உதவி ; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து

என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளவும் வாய்க்கும்!