பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

189

நூலார்வமும் நூலாக்கமும் என்பது ஏழாம் பகுதி. தம் நூல்களின் வெளியீடு, திருக்குறள் உரை, நூல்களை வாங்கும் ஆர்வம், கழக ஆட்சியாளர் வ.உ.சு. உதவி, மொழிநூல்வழிப் பட்ட சொல்லாய்வு, குன்றக்குடி அடிகளார் உதவி, தமிழர் திருவைந்தெழுத்து, அணுக்குண்டுநூல் இன்னபல செய்திகள் ப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

அச்சீடும் மெய்ப்புப் பார்த்தலும் என்னும் எட்டாம் பகுதியில், அச்சக உரிமையாளர். அச்சீட்டுநிலை, மெய்ப்புத் திருத்தம், கட்டடம்கட்டல், இடைச்சேர்க்கை, சிப்பமிடல் இன்னவை குறிக்கப்பட்டுள்ளன.

ஒன்பதான் பகுதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலிப் பணி பற்றியதாகும். அகர முதலிப் பொதுக்குழு, முதன்மொழி இதழ், சொற்றொகுப்பு, அகர முதலிக்கு அரசின் உதவி, பிறமொழி அகரமுதலிப் பணிகள், இயக்குநர் அமர்த்தம், அகரமுதலித் தொண்டின் சிறப்பு, சொற்றொகுப்பாளர் செய்தி, புதுப்பதவிகள், அச்சீடு, பணியமர்த்த இடர்பாடு இன்னன பற்றிய செய்திகள் இதில் உள.

சொல்வளம் என்னும் நிறைவுப்பகுதி பத்தாவதாகும். இதழாசிரியர்க்கு வேண்டும் மொழித்திறம், ஆங்கில நேர் தென்சொற்கள், தனித்தமிழ்ப் பெயர் மாற்றம், சிலசொற்களின் ளக்கம், வேராய்வு, கலைச் சொல்லாக்கம், மொழியாக்கம் என்பன பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம். திருநகர், மதுரை-6.

தமிழ்த்தொண்டன் இரா. இளங்குமரன்