பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

உறவுத் தொழில் :

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கடிதம் விடுக்கப்படுவோர்க்கும் விடுப்போர்க்கும் உள்ள உறவை அல்லது தொடர்பைக் குறிக்கும் தொடர்மொழி உறவுத் தொடர்மொழியாகும். இது செய்திக்குக் கீழாக வலப்புறத்தில் வரையப்பெறும்.

கைந்நாட்டு :

உறவுத் தொடர்மொழிக்குக் கீழாக அதனினும் சற்று வலமாக, கடிதம் விடுப்போரின் பெயர், தந்தை பெயரின் முதலெழுத்துடன் தெளிவாக வரையப்படுதல் வேண்டும். அறிமுகமாகாதவர்க்கு எழுதுங் கடிதங்களில் அது மிகத் தெளி வாக இருத்தல் வேண்டும்.

முகவரி :

கடிதவுறையின் பின்புறத்தில் அல்லது மடித்த கடிதத்தின் பின்புறத்தில், கடிதம் விடுக்கப்படுவோரின் முழு முகவரியும் தெளிவாய் வரையப்படுதல் வேண்டும்.

இவற்றை உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் கட்டுரையியலில் விரிவாக வரைந்துள்ளார் பாவாணர். அவர்தம் புனைவுக் கடிதப் போலிகைக்கு ஒரு சான்று :

போலிகை

நட்புக் கடிதம் (Friendly Letter)

(ஒரு மாணவன் தன் பள்ளிக்கும் வேறோரு பள்ளிக்கும் நடந்த காற்பந்துப் பந்தயத்தைப்பற்றித் தன் நண்பனுக்கு வரைவது.)

6, வேளாளத் தெரு, மன்னார்குடி, 8-2-'49

அருமை நண்ப,

நலம். உன் நலத்தை இன்று உன் கடிதத்தால் அறிந்து கொண்டேன்.

நேற்று மாலை எங்கள் பள்ளிக்கும் இவ்வூரிலுள்ள தேசிய உயர்நிலைப் பள்ளிக்கும் ஒரு காற்பந்துப் பந்தயம் நடந்தது. அது, முதலிலிருந்து முடிவு வரை உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியாயிருந்தது.