பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

படையில் தமிழாய்ந்து குமரிநாட்டுத் தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மை கண்டு அதை விளக்குமுகமாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர். செந்தமிழ்ச் செல்வியிலும், பல மொழி யாராய்ச்சிக் கட்டுரைகளை

வெளியிட்டு வருபவர்.

தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை இன்னும் ஈராண்டிற்குள் உலகமேடையில் நாட்ட விருப்பவர்

8.5.1974 அன்று தமிழ்நாட்டரசால் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக அமர்த்தப்பட்டு ஒழுங்காகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர்.

கோடி கொடுப்பினும் கொள்கை விடாதவர். புகழ்ச்சி யையும் பட்டங்களையும் விரும்பாதவர்.

பயன்படாது

ம்

ஐயாண்டு, மாதம் ஆயிரம் அன்பளிப்பு எனக்கும் தமிழறிஞர் வரிசையில் என்னொடு சேர்க்கப்பட்டவர்க்கும் அன்று. நீர் படித்த செய்தித்தாளில் விளக்கமாயில்லை கோலும்!

வாய்ப்பாடகர் இருவர்கள் கருவியிசைவாணர் மூவர்க்குமே அவ்வன்பளிப்பு. எனக்கும் கா. அப்பாத்துரை, வ.சுப்பையாப் பிள்ளை உள்ளிட்ட ஏனை நால்வர்க்கும் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்னும் பட்டத்தோடு ஒரு கேடகமும், ஒரு பதக்கமுமே.

பட்டம்

எனக்கு எள்ளளவும் பயன்படாது. மற்ற இரண்டையும் பார்த்தபின் தான் ஏதேனும் சொல்லமுடியும். நான் அரசினர் அலுவலனாயும், மாதச் சம்பளம் வாங்குபவ 6 னாயும் இருப்பதால் மாதம் பணக்கொடை எனக்கு வழங்கார். ஐயாயிரம் பத்தாயிரம் எனும் பெருந்தொகை மொத்தமாய் நல்க டமுண்டு.

என் பணிக்கு வேண்டிய இரு துணையாளரை இன்னும் அமர்த்தவில்லை. ஓர் இயங்கியும் தொலைபேசியும் வேண்டு மென்று எத்தனைமுறை சொல்லியும் செவிசாய்க்க வில்லை. முந்தின ஆட்சியும் இங்ஙனமே.

இவ்வேந்துகளைச் செய்தாலே போதும்.

1500 என்பது நிலைத்த சம்பளம். ஆண்டுக் கூடுதலும் பேரெல்லையும் உள்ள திட்டமேயில்லை.