பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

11

முதலாவது, எங்கள் கல்விச் சாலைக் கட்சியார் னையாட்டு நிலத்தின் கீழைப் புறத்திலும் எதிர்க் கட்சியார் மேலைப் புறத்திலும் நின்று விளையாடினார்கள். காற்று மிக வேகமாகக் கிழக்கு நோக்கியடித்துக் கொண்டிருந்தது. இது எதிர்க்கட்சிக்குச் சார்பாகவும் எங்கள் கட்சிக்கு மாறாகவும் இருந்ததனால், எதிர்க்கட்சியார் மிக விரைவில் கோல் போடத் தொடங்கி, அரைமணி நேரத்திற்குள் ஆறு கோல் போட்டுவிட்டார்கள். எங்கள் கட்சியார் கோல் வாங்கினார்களே யொழிய, ஒன்று கூடப் போட முடிய

வில்லை.

பின்பு, அரை வேளை வந்தது. பிற்பாதியில்

எங்கள்

காற்றடிக்கும் பக்கத்திற்கு எதிர்க்கட்சியார் போனபின் கட்சியார் கடனையுங்கழித்து மேற்கொண்டும் கோல் போடுவார்கள் என எண்ணி ஐந்து நிமையம் ஒருவாறு மகிழ்ந்திருந்தோம்.

ஆயின், மீண்டும் விளையாட்டுத் தொடங்கியவுடன் காற்று நின்றுவிட்டது. அப்போதே எங்கட்குக் கலக்கம் பிறந்துவிட்டது. அதோடு, பத்து நிமையங்கழித்து, 'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்னும் பழ மொழிப்படி, எங்கள்கட்சித் தலைவனும் தேர்ச்சிபெற்ற காற்பந்தாடகனுமாகிய ஆளவந்தான் அண்மையில் கடு நோய் பட்டுத் தெளிந்தவனாதலால், திடுமென்று மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். அன்றே எங்கள் அரை நம்பிக் கையும் போய்விட்டது. அவனுக்குப் பதிலியாக (Subsitute) வந்த வெற்றிவேலோ, நேற்று வரை எந்தப் பந்தயத்திலும் விளையாடினதுமில்லை; விளையாடத் தக்கவன் என்று கருதப்பட்டதுமில்லை. நேரம் கால் மணிதான் இருந்தது. எங்கட்கு ஏக்கமும் முன்னினும் பன்மடங்கு மிகுந்துவிட்டது. ஆயினும் காரிருளில் பளீர் என ஒளி வீசும் மின்னல்போல் ஒரு நிமையத்திற்குள் வெற்றிவேல் ஒரு கோல் போட்டான். எங்கட்குக் கலக்கம் முற்றும் தீரவில்லையாயினும் எங்கள் நம்பிக்கை எழத்தொடங்கிற்று. பின்பு, வெற்றிவேல் மிகவூக்கங் காண்ட மின்னல் வேகத்தில் வேகத்தில் விளையாட, எதிர்க்கட்சியார் மருள் கொண்டார் போல் மனந்தடு மாறவும், கண்டாரெல்லாம் இடைவிடாது ஆரவாரித்துக் கை தட்டவும் எதிர்க் கட்சிக்கோல் காப்போன் பந்தை எற்ற எற்ற உடனுடன் திருப்பியெற்றி, பத்து நிமையத்திற்குள் ஐந்து