பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

3. அன்பும் நண்பும்

தமையனார் இடம்

207

தங்கள்

தமையனார் இறந்தது, இறந்தது, தமிழ்ப்பற்றுள்ள அனைவரும் வருந்தத்தக்க செய்தியாகும். இங்குப் பலர் வருந்தினர். தஞ்சை வரகுணபாண்டியன் அவர்கள், ‘செல்வி'யால் அறிந்து மிகமிக வருந்தினர். தாங்கள் அந்தப் பதவிக்கு வர இயலுமாயின் வேண்டிய முயற்சியெல்லாம் செய்க.

வ.சு. 31.5.

(செல்வி - செந்தமிழ்ச்செல்வி மாதிகை)

சட்டர்சி

உண்மைத் தமிழரான செல்வர் இருப்பின் மறைமலை யடிகட்கும் அவர்களின் அடியொற்று பவர்க்குமேயன்றி வங்கத்துச் சட்டர்சிக்கு வெள்ளிக் கேடகம் செல்லாது. கல்லூரியில் இல்லாவிடினும் தமிழ்நாடு அலுவலகத்திலாவது எனக்கு வேலை கிடைத்திருக்கும்.

உண்மை நண்பர்

வி.அ.க. 12.2.64

திரு. இராசேந்திரன் எழுதாவிட்டாலும் பணந்தொகுக்கா விட்டாலும் குற்றமில்லை. அவர் தாமாகச் செய்யக்கூடிய உண்மை நண்பர். ஒருமுறை அவர்க்குச் சொன்னது போதும். மீண்டும் அவரைக் கேட்க வேண்டாம். அது அவர்க்கு தொல்லை காடுப்பதுபோல் இருக்கலாம். அவரே தொகுத்து நேராகவோ தங்கள் வாயிலாகவோ மதுரைக்கு விடுப்பேன் விடுக்கட்டும். ஆயின் என்னை அங்கு வரவழைத்துப் பணந்தண்டுவது நன்றன்று. மதுரை விழா நடந்தபின் சொற்பொழிவுக்கெனின் அங்கு வருவேன். அவரைத் தற்செயலாய்க் காணின். இதைத் திட்டமாய்ச் சொல்விடுக.

·

பெரு. 20.4.64