பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

பாடல்கள்

பாவாணர் கடிதங்கள் கோல் போட்டது மந்திரமோ மாயமோ என்று எண்ணுதற் கிடமாயிருந்தது.

இந்த ஆட்டத்தை நீ பார்க்கவில்லையே என்பதுதான் என் வருத்தம். இங்ஙனம் ஆறுகோல் போட்டுக் கடனை முற்றும் கழித்துவிட்டது மட்டுமா? விளையாட்டு முடிவதற்கு ஒரு நொடியிருந்தபோது மீண்டுமொரு கோல் போட்டுத் தன் பெயரை மெய்ப்பித்துவிட்டான் வெற்றிவேல். எங்கட் குண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஊராரெல்லாம் விளையாட்டு முடிந்தவுடன் ஓடிவந்து வெற்றிவேலைச் சூழ்ந்து கொண்டு, நீண்ட நேரம் நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தினர். சிலர் அவன் வீடு வரை அவனைத் தொடர்ந்து சென்றனர். இன்று இவ் வூரெல்லாம் அவனைப் பற்றித்தான் பேச்சு.

இஃது உனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைக்கு மென்று கருதுகின்றேன்.

பிறபின்,

-

நண்பன், ஆடவல்லான்

மாணவர்க்கு எழுதப்பட்ட - கட்டுரைப் பயிற்சிப் புத்தகத்திலே எழுதப்பட்ட போலிகையாக இட்டுக் கட்டி எழுதப்பட்ட கடிதத்திலே, எத்தனை வகை உணர்ச்சிகள்? ஆனால் உணர்வு களின் உந்துதலால் அவ்வப்போதில் அவ்வுணர்வுடையார்க்கோ, எதிரிடையார்க்கோ எழுதப்பட்ட கடிதம் எப்படி இருக்கும்? ஆகலின் பாவாணர் கடிதப் பொருள் பயன் மிக்கதாகவும், சுவை மிக்கதாகவும் இருத்தல் ஒருதலை என்பதை ஆயவே வேண்டிய தில்லையாம்!

பாவாணர், மன்னார்குடியில் இருந்த 1931 ஆம் ஆண்டில், எழுதிய கடிதங்களில் கல்லூரிப் பெயரும் (Findlay College) ஊர்ப்பெயரும் (Mannargudi) ஆங்கிலத்திலே எழுதப்பட்டன. ஆனால் அடுத்த ஆண்டே தமிழில் எழுதலாயினார். அந்நாளில் இருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆங்கில ஆண்டு மானத்தையே குறிப்பிட்டுள்ளார்! பின்னர்த் தி.பி; கி.பி. ஆகிய இரண்டையும் பயன்படுத்துதலும், தி.பி.யை மட்டும் பயன்படுத்துதலும், கி.பி.யை மட்டும் பயன்படுத்துதலும் ஆகிய முந்நெறிகளையும்