பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

4. ஆய்வும் அறிவுறுத்தமும்

அயலொலி

ஆய்த வரியைச் சில அயலொலி குறிக்கப்பயன்படுத்தி ஃ ப (F)என்று ஃச், (Sh , ஷ) என்றும் பிறவாறும் ஆண்டு வருதல் பகைவர் கையில் குடுமியைக் குடுமியைக் கொடுக்கும் பேதைமை போலாகும். எழுத்தென்பது ஒலியேயன்றி வரியன்று. ஒலியின் குறியே வரி. அயலெழுத்து வேண்டாமென்று நாமே சொல்லிக்கொண்டு நாமே அயலெழுத்தை ஆள்வோமாயின் அதை என்னென்பது?

தமிழ்மொழி அயலொலியாற் கெடுமேயன்றி அயல் வரியாற் கெடாது. அயல் ஒலியைப் பயன்படுத்தும் வரையில் அதைக் குறிக்கும் வரி எது வந்தாலும் ஒன்றுதான்.

ஆய்த ஒலியைத் தவறான வழியிற் பயன்படுத்துவதனால் அதன் இயல்பான ஒலியும் கெடுகின்றது. கஃசு என்பதை Kahsu என்றொலிப்பதா? கஷு (Kashu) என்றொலிப்பதா?

ஒலியிலக்கணமும் தமிழியல்பும் அறியா மாற்றம் செய்த லால் பகைவர்க்குப் பிடிகொடுத்து அவர் எள்ளி நகையாட நேரும்.

பிழையில்லை

தங்கள் முடங்கலிற் பிழையில்லை.

வ.சு. 31.1.52

பெரு. 20.2.64

தனித்தமிழ்க் கழகம்

மாநாட்டில் தமிழ்நாடு தழுவி தனித்தமிழ்க் கழகம் அமைக்கப்பெறும். நுங்கள் முத்தமிழ் மன்றம் திருச்சியி லிருப்பதால் அதுவே தமிழ்நாட்டுக் கழகத்திற்கு அகடாக அமைய நேரும்.